ஆர்யா புத்திசாலி விஷால் அதிபுத்திசாலி. விஷாலைப் பார்த்து ஆர்யாவுக்குப் பொறாமை. அதனால் பதிமூணு வயதில் தொடங்கும் போட்டி 33 வயதுவரை நீடிப்பதுதான் எனிமி. பரபரப்பான சண்டைகள், கலகலப்பான பாடல்கள், ்அப்பா பாசம், தமிழ் மக்கள் மீது பற்று என விஷாலுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
விமர்சனம்
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள சௌந்திரபாண்டியபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி. மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1965 இல் படித்த காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். முதுகலை பட்டப் படிப்பு முடித்த பிறகு விழுப்புரத்திலும், பிறகு திண்டிவனம் அரசுக் கல்லூரியிலும்
கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள் நான்கு இளைஞர்கள்.போன இடத்தில் ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்படுகிறது.அந்தக்குடும்பத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் மருத்துவர்கள் அவர்களுக்கு ஒரு 12 வயது பெண்குழந்தை.திடீரென அப்பெண் குழந்தையும் நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். அவர்கள் எங்கே போனார்கள் என மற்றவர்கள் தேடுகிறார்கள்?.காணாமல் போன இளைஞர் பிணமாகக்
ஒரு பிரமாண்ட அரண்மனை. அதற்குள் இருபது வருடங்களுக்கும் மேலாக ஓர் ஆவி சுற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் நாயகி ராஷிகண்ணாவுக்கும் இன்னொரு நாயகியாக இருக்கும் சாக்ஷிஅகர்வால் குழந்தைக்கும் சிக்கல். எதனால் அப்படி? என்பதையும் அதற்குத் தீர்வு கண்டார்களா? என்பதையும் திகிலும் நகைச்சுவையும் கலந்து சொல்லியிருக்கும் படம் அரண்மனை 3. அரண்மனைக்கு மின்சாரக்கட்டமைப்பு வேலை செய்ய வரும்
அண்ணன் தங்கைப் பாசத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பல அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதுதான் உடன்பிறப்பே. ஜோதிகாவின் ஐம்பதாவது படம் என்பதால் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவருடைய அறிமுகக்காட்சியை அமைத்திருக்கிறார்கள். குடும்பப் பாசம் மிகுந்த பெண் என்பதோடு மாந்தநேயம் மிக்க பெண் என்பதற்கான காட்சிகள் அதிகம். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய பொறுப்பை
ஒரு பெரிய நிறுவனத்தில் உயரதிகாரி வேலை, வீடு, மகிழுந்து, வேலையாட்கள் என வசதியான வாழ்க்கை. அன்பான மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் கொண்ட நல்ல குடும்பம். மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். இவ்வளவு வசதிகளும் கொண்ட தம்பிராமய்யாவுக்கு 25 ஆவது திருமண நாள் கொண்டாடுவதற்கு முந்தைய இரவு விபத்து காரணமாக மரணம் நேருகிறது. மரணத்திலிருந்து மீண்டும் குறிப்பிட்ட நாட்கள் உயிரோடு வாழ ஒரு
படம் தொடங்கியதும் ஒரு மரணம். அதன்பின் ஒரு பெரிய நிறுவனத்தில் குழுத்தலைவராகப் பொறுப்பேற்கிறார் கவின். முதல்நாளிலேயே இரவு பத்துமணிக்கு மேல் வேலை செய்யவேண்டிய சூழல். வேலை முடித்து வீட்டுக்குக் கிளம்பினால், அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை என்றால் எப்படி இருக்கும்? பாதி நேரம் அவர் மட்டும் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுகிறார், அதன்பின் அவருடன் நாயகி அம்ரிதாவும்
மிகவும் உணர்வுப் பூர்வமான விசயங்களை விளையாட்டாக அணுகுவதே இன்றைய இளைய தலைமுறையைக் கவரும் உத்தி என்று நினைத்துப் பயணிக்கும் ஹிப்ஹாப் தமிழாவின் படங்களின் வரிசையில் இன்றொன்று சிவகுமாரின் சபதம். காஞ்சிபுரத்தில் பாரம்பரியமான பட்டு நெசவாளர் ஒருவர் கதை நாயகன். அவர் மகனுக்குத் திருமணம் நடக்கும் அதே நாளில் அவர் மனைவிக்குக் குழந்தை பிறக்கிறது. அந்தக்குழந்தை வளர்ந்து ஆளாகிறது என்றால்
ஊருக்கு நல்லது செய்வதுபோல் நடித்து மக்களை ஏமாற்றி பொதுச்சொத்துகளைக் கொள்ளையடிக்கும் அரசியல் செல்வாக்குள்ள நபரை எதிர்க்கும் இளைஞர்கள் என்கிற கருவைக் கொண்டு உருவாகியிருக்கும் படம் வீராபுரம் 220. நாயகன் அங்காடித்தெரு மகேஷ் சில காட்சிகளில் சிறப்பாகவும் பல காட்சிகளில் பாவமாகவும் இருக்கிறார். ஊரில் நடக்கும் விபத்துகள் குறித்த இரகசியம் தெரியும்போது பொங்குகிறார். நாயகி மேக்னா
சின்னச் சின்ன திருட்டுகள் செய்யும் யோகிபாபு ஒரு கட்டத்தில் பேய் ஓட்டுகிறவர் எனப் பொய் சொல்லி ஒரு பெரிய பங்களாவுக்குச் செல்கிறார். அங்கு பேய்களிடம் மாட்டிக் கொள்ளும் அவரும் அவருடைய குழுவினரும் எப்படித் தப்பிக்கிறார்கள்? அந்தப் பேய்கள் பேய்களானது எப்படி? போன்ற கேள்விகளுக்கு விடைதரும் படம் பேய்மாமா. யோகிபாபு ஏற்கெனவே பல படங்களில் செய்த வேடம். அலட்சியமாக நடித்துவிட்டுப்
























