அச்சு அசலான கிராமத்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் அப்படியே காட்சிப்படுத்தும் வகையில் அவ்வப்போது சில படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் தண்டட்டி. தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள் ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான
விமர்சனம்
ராகவாலாரன்ஸ் டாப்சி உட்பட பலர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் காஞ்சனா 2. அந்தப்படத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் உயர்வுக்காக ஒரு நிகழ்ச்சியைத் தயாரிக்க ஒரு வீட்டுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துவார்கள். பொய்யாகப் பேய்க்கதையை எடுக்க நினைத்து அங்கு போனால் நிஜமாகவே அங்கு பேய் இருக்கும். அதனால் பல சிக்கல்கள். அந்தப் பேய்க்கு ஒரு முன் கதை இருக்கும். நாயாடி படமும்
யூட்யூப் சேனல் நடத்தும் நாயகன் வசந்த்ரவி மற்றும் குழுவினர் ஒரு தீவில் தனியாக இருக்கும் வீட்டுக்கு படப்பிடிப்பு நடத்துவதற்காகச் செல்கின்றனர். அங்கு பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிற்குப் பின்னால் 1500 ஆண்டு காலப் பழமையான ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை திகிலுடன் சொல்லியிருக்கும் படம் அஸ்வின். முரட்டுத்தனத்துக்குப் பெயர்போன நாயகன்
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் லவ்டுடே. அந்தப்படத்தின் நாயகன் பிரதீப் நாயகி இவானா ஆகியோர் காதலிக்கிறார்கள். அக்காதலை ஏற்றுக் கொள்ள இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரும் உங்கள் கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குச் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம் என்கிறார்.அதன்படி கைபேசிகளை மாற்றிக் கொள்வதால் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றை எப்படி
ஊர்வசி, பாலுவர்கீஸ், கலையரசன், குரு.சோமசுந்தரம் ஆகியோரை வைத்துக் கொண்டு சுவையான திரைக்கதை மூலம் நல்ல கருத்தைச் சொல்லும் படம் சார்லஸ் எண்டர்பிரைசஸ். நாயகன் பாலு வர்கீஸுக்கு மாலைக்கண் குறைபாடு. அதனால், அவரது திருமணம் நிற்கிறது. வேலையும் பறிபோகிறது. சொந்தமாகத் தொழில் தொடங்க முயல்கிறார். அப்போது, அவரது அம்மா ஊர்வசியின் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் சிலையை மிகப்பெரிய தொகை
பெரிய பெரிய துணிக்கடைகளில் காட்சிக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா.அங்கு புதிதாக வரும் ஒரு பொம்மை அவருடைய காதலி போலவே இருக்கிறது. அந்த பொம்மையையே காதலிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த பொம்மையை இவர் இல்லாத நேரத்தில் ஒரு கடைக்கு விற்பனை செய்துவிடுகிறார்கள். பொம்மை காணாதது கண்டு பொங்கியெழும் எஸ்.ஜே.சூர்யா, ஒரு கொலையைச்
குணசித்திரநடிகர்களான சார்லி, எம்.எஸ்.பாஸ்கர்,ஜார்ஜ் மரியான்,சூசன் ஜார்ஜ் ஆகியோரோடு சிறுமி மோனிகாசிவா சிறுவன் சக்திரித்விக் ஆகியோரையும் வைத்துக் கொண்டு ஓர் உணர்வுப்பூர்வமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.ஜி. விவசாயக்கூலியான சார்லி, முதல் மனைவி இறந்ததால் சூசனை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்கிறார். முதல் மனைவியின் குழந்தைகள்தாம்
சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கதைக்கருவைக் கொண்டதுதான் விமானம். வறுமையோடு போராடும் மாற்றுத்திறனாளி சமுத்திரக்கனியின் ஒரே மகன் மாஸ்டர் துருவன். அவனுக்கு விமானம் மீது அதீத ஈடுபாடு. ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என்றும் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றப்
கொடூரமான கொலைகள் நடக்கின்றன, அவற்றை துப்புதுலக்கும் காவல்துறை அதிகாரிகள், அவர்களுக்குள் நடக்கும் நீயா நானா? போட்டி, அவற்றைத் தாண்டி தொழிலில் அவர்கள் காட்டும் திடம், குற்றவாளி யார்? ஏன்? ஆகியனவற்றை அழகாக வரிசைப்படுத்தியிருக்கும் படம் போர் தொழில். சரத்குமாரின் வேடம் அவருடைய அனுபவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது போலவே அமைந்திருக்கிறது. எதையும் சாதிக்கும் அறிவுத்திமிரை அழகாக
பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் படம்தான் பெல். இந்தப்படத்தின் நாயகன் நடன இயக்குநர் ஸ்ரீதர், சித்தர்களின் வழித்தோன்றல்.அவர் நூறு வருடங்கள் வாழக்கூடிய சக்தியைக் கொடுக்கும் மூலிகையைப் பாதுகாத்து வருகின்றனர். அதே சித்தர்களின் வழித்தோன்றலில் வந்த எதிரநாயகன் குரு























