September 27, 2026
Home Archive by category விமர்சனம் (Page 31)

விமர்சனம்

விமர்சனம்

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – விமர்சனம்

காதல் கதைகள் விதவிதமாக வந்துவிட்டன.இந்தப் படத்தில் சின்னப் பிரச்சினையால் பிரிந்த காதலர்கள் மீண்டும் சேர முயல்கிறார்கள்.ஆனால் அதற்கு பல்வேறு தடைகள்.அவை என்னென்ன? அவற்றின் முடிவென்ன? என்பனவற்றை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ். நாயகனாக நடித்திருக்கும் அசோக்
விமர்சனம்

ஜீப்ரா – திரைப்பட விமர்சனம்

தனியார் நிதிநிறுவனங்களைக் காட்டிலும் வங்கிகளில் சேமிப்பது நல்லது என்கிற கருத்து உண்டு.வங்கிகளில் இருக்கும் நம் பணத்தின் நிலைமை என்ன? என்பதை எடுத்துச் சொல்லி அதிர வைத்திருக்கும் படம் ஜீப்ரா. தெலுங்கு மொழிமாற்றுப்படமான இதில் நாயகனாக சத்யதேவ் நாயகியாக பிரியா பவானி சங்கர், வில்லனாக டாலி தனஞ்செயா,முக்கிய வேடமொன்றில் சத்யராஜ் நடித்திருக்கிறார். நாயகன் சத்யதேவ் ஒரு வங்கியில்
விமர்சனம்

லைன்மேன் – திரைப்பட விமர்சனம்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலுள்ள உப்பளத்தைக் கதைக்களமாகக் கொண்டு மனிதம் பேசி வெளியாகியிருக்கும் படம் லைன்மேன். மின்சாரவாரிய தொழிலாளரைக் குறிக்கும் சொல்லை இப்படத்தின் பெயராக லைன்மேன் பெயரை வைத்திருக்கிறார்கள்.அந்தப் பெயருக்குரியவராக சார்லி நடித்திருக்கிறார்.அவர் மின்வாரிய ஊழியராக இருக்கிறார்.மின்சாரத்தால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நினைக்கும் அவருடைய மகன்
விமர்சனம்

பணி – திரைப்பட விமர்சனம்

ஜோஜு ஜார்ஜ், பாபி குரியன், பிரசாந்த் அலெக்சாண்டர்,சுஜித் அலெக்சாண்டர் ஆகிய நால்வரும் திருச்சூரில் பெரிய தாதா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.ஒற்றுமையாகக் கொலை கொள்ளைகள் செய்யும் இவர்களுக்கிடையில் எதிர்பாரா மோதல் வெடிக்கிறது.அதன் விளைவென்ன? என்பதைச் சொல்வதுதான் பணி திரைப்படம். முதன்மை நாய்கனாக நடித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜே இயக்கியிருக்கிறார்.அவரது பாத்திரப்படைப்பும் அதில்
விமர்சனம்

நிறங்கள் மூன்று – திரைப்பட விமர்சனம்

திரைப்பட இயக்குநராக வேண்டும் என்கிற வெறியுடன் திரியும் ஓர் உதவி இயக்குநர்,ஒரு நேர்மையற்ற காவல்துறை அதிகாரி மற்றும் பொறுப்பான பள்ளி ஆசிரியர் ஆகிய மூன்று கதாபாத்திரங்களை முதன்மையாக வைத்துக் கொண்டு ஒரு காதல் இணையரை துணைக்கு வைத்துக் கொண்டு விறுவிறுப்பான படத்தைக் கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். உதவி இயக்குநர் அதர்வா,காவல்துறை அதிகாரி சரத்குமார், பள்ளி
விமர்சனம்

பராரி – திரைப்பட விமர்சனம்

சொந்த ஊரில் சாதி ரீதியான ஒடுக்குமுறை வெளிமாநிலத்தில் மொழி ரீதியான ஒடுக்குமுறை ஆகியனவற்றைச் சந்திக்கும் எளிய மனிதர்களைப் பற்றிப் பேசியிருக்கும் படம் பராரி. திருவண்ணாமலை மாவட்டம் இராசபாளையத்தில் வசிக்கும் நாயகன் ஹரிசங்கருக்கும் அவ்வூரைச் சேர்ந்த நாயகி சங்கீதா கல்யாணுக்கும் காதல்.இந்தக்காதலுக்கு சாதி தடையாகிறது.இதனால் கர்நாடகா செல்கிறார்கள்.அங்கு காவிரி நீர்ச் சிக்கல் காரணமாக
Uncategorized விமர்சனம்

நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல் – ஆவணப்பட விமர்சனம்

கேரளாவின் சிறிய நகரமான திருவல்லாவில் சிஏ படிக்க ஆர்வமாக இருந்தவர் டயானா.அவரைத் தேடி திரைப்பட வாய்ப்பு வருகிறது.முதலில் மறுத்த அவர் பின்பு சம்மதித்தார்.அதன் விளைவு, 2003 ஆம் ஆண்டு சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான ‘மனசினக்கரே’ மலையாளப் படம் தான் நயன்தாராவின திரையுலக அறிமுகம். டயானாவாக இருந்தவரை நயன்தாரா என பெயர் மாற்றம் செய்தவர் சத்தியன்
விமர்சனம்

கங்குவா – திரைப்பட விமர்சனம்

ஒவ்வொருவருக்கும் பல பிறவிகள் உண்டு என்கிற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட கதை. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கங்குவா எனும் அரசனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இப்போதும் நடக்கிறது. அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் படம். 1070 ஆம் ஆண்டில் பெருமாச்சி எனும் நிலப்பரப்பின் தலைவராக இருக்கும் கங்குவா, ஒரு சிறுவனின் உயிரைக் காக்க சபதமேற்கிறார். அதில்
விமர்சனம்

ப்ளடி பெக்கர் – திரைப்பட விமர்சனம்

ஒரு போலி பிச்சைக்காரர் தன் பேராசையால் ஒரு பேராபத்தில் மாட்டிக் கொள்கிறார்.அதிலிருந்து அவர் மீண்டாரா? அங்கு என்னவெல்லாம் நடந்தன? என்பனவற்றைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல முயன்றிருக்கும் படம் ப்ளடி பெக்கர். ஓர் ஆடம்பர மாளிகையில் நடைபெறும் அன்னதானத்துக்காக ஆதரவற்றோர் சிலர் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.அவர்களில் ஒருவராகச் செல்லும் பிச்சைக்காரர்,அங்கேயே தங்கி விடுகிறார்.அங்கு ஒரு
விமர்சனம்

பிரதர் – திரைப்பட விமர்சனம்

ஜெயம் ரவியிடம் இருக்கும் வாதிடும் திறமை பார்த்து அவரைச் சட்டம் படிக்க வைக்கிறார் அவருடைய அப்பா அச்யுத்குமார்.ஆனால்,ஜெயம் ரவியின் செயல்களால் அவரே வீட்டைவிட்டுத் துரத்துகிறார்.இதனால் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்துவரும் ஜெயம்ரவியின் அக்கா பூமிகா,அவரைச் சரி செய்வதாகக் கூறி ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார்.ஜெயம் ரவி அங்கு போனதும் அக்கா குடும்பத்துக்குள்ளும் சிக்கல்கள். அவை