தொண்ணூறுகளில் நடக்கும் முக்கோணக்காதல் கதை. அதற்குக் காரணம் தகவல் தொடர்பு வசதிகள் இப்போது இல்லாததால் நடக்கும் நிகழ்வுகளில் தாம் திரைக்கதையின் பலம் அடங்கியிருக்கிறது என்பதுதான். நாயகர்களாக டிட்டோ மற்றும் மகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.அவர்களின் நிறம், தோற்றம் ஆகியனவற்றிற்கும் திரைக்கதையில்
விமர்சனம்
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து ஆளாகும் நாயகி கவிப்ரியா மனோகரனும் நாயகன் மைக்கேல் தங்கதுரையும் காதலிக்கிறார்கள்.இருவரும் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்கள்.அதிகச் சம்பளம் கிடைக்கிறது என்பதால் ஒரு மலைக்காட்டுக்குள் தனிமையில் இருக்கும் வயதான பெண்மணியைப் பராமரிக்கும் வேலைக்குப் போகிறார் நாயகி. அங்கு போனதும் நாயகிக்குப் பல எதிர்பாராத சிக்கல்கள்.அவை
விஜய்,சூர்யா ஆகியோர் இணைந்து நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தின் மூலம் பிரபலமான சொல் ல்தகா சைஆ.இதை அப்படியே திருப்பிப் போட்டால் காதல் ஆசை. இந்தப்பெயரைப் படத்துக்கு வைத்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான சதா நாடார். நாயகன் சதா நாடார்,நாயகி மோனிகா சலினா ஆகியோர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் இணையர்.திடீரென நாயகனுக்கு வரும் கனவுகள்
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்திய ஒன்றிய அரசு 2014 ஆம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவரை அங்கீகரித்து அவர்களுக்கான உரிமைகள் சலுகைகள் உள்ளிட்டவற்றை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும் வெகுமக்கள் மனநிலை அவர்களை முழுமையாக ஏற்கவில்லை.நாள்தோறும் அல்லல்படுகிறார்கள். இதை இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் படம்தான் நீலநிறச்சூரியன். என் பெயர்
காதல்,சண்டை,கொலை.விசாரணை ஆகிய அம்சங்களைக் கொண்ட கதையை ஓடும் தொடர்வண்டிக்குள் வைத்து வேகமாக்க முயன்றிருக்கும் படம் ஹிட்லர். மதுரையில் இருந்து சென்னை பயணிக்கும் நாயகன் விஜய் ஆண்டனி,தொடர்வண்டி நிலையத்தில் நாயகி ரியாசுமனைக் கண்டதும் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்.அதே தொடர்வண்டிக்குள் ஓர் அமைச்சரின் பெரும்தொகையான பணம் கொள்ளை போகிறது.கொலையும் நடக்கிறது.அதை விசாரிக்க காவல்துறையும்
பெரும் கசப்புடன் சொந்த ஊரைவிட்டுப் போய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திருமணத்துக்காக ஊருக்குத் திரும்ப வரும் ஒருவர், வந்த இடத்தில் ஒருவரைச் சந்திக்கிறார்.அவர் இவருடன் அன்பாகப் பழகுகிறார்.இவருக்குப் பணிவிடை செய்கிறார்.ஏராளமான விசயங்களைப் பேசுகிறார்.அவர் யாரென்றே இவருக்குத் தெரியவில்லை.அவர் யார்? என்கிற கேள்விக்கு விடையாக விரிந்திருப்பதுதான் மெய்யழகன்.
அதிக விளையாட்டுத் தனம் கொஞ்சம் பொறுப்புணர்வு நிறைய அறிவுரை சொல்வது அல்லது கேட்பது என்கிற வகையிலேயே நடித்துக் கொண்டிருந்த ஹிப்ஹாப் ஆதி, உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை பேசும் ஒரு விபரீத முடிவை எடுத்து அவருடைய இரசிகர்களைச் சோதனைக்குள்ளாக்கியிருக்கிறார். உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து மூன்றாம் உலகப்போரை நடத்திக் கொண்டிருக்கின்றன.அதைத் தமிழ்நாட்டில் இருக்கும் ஹிப்ஹாப் ஆதி
பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள் வலியும் வாழ்வும் தான் கோழிப்பண்ணை செல்லதுரை. நாயகன் ஏகன் அவருடைய தங்கை சத்யாதேவி ஆகியோரை குழந்தைகளாக விட்டுவிட்டு அம்மா போய்விட அப்பாவும் அவர்களைக் கைவிட்டுவிடுகிறார்.ஆதரவு கொடுத்த பாட்டியும் மறைந்துவிட கோழிப்பண்ணை நடத்தும் யோகிபாபு அடைக்கலம் கொடுக்கிறார்.அப்பா அம்மா இல்லாத குறை தெரியாமல் தங்கையை வளர்க்கிறார் அண்ணன்.தங்கைக்குக் காதல்
சமகால நாட்டு நடப்புகளை வரலாறுகளின் மூலம் தெரிந்துகொள்வதை விட இலக்கியங்கள் மற்றும் கலைவடிவங்கள் வழி அறிந்து கொள்வது அதிகம். நந்தன் படமும் இதுவரை சொல்லப்படாத கதையைத் திரையில் சொல்லியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் சாதிய ஆதிக்கம் குறித்து அரசியல் பார்வையுள்ளோர் மற்றும் செய்தித்தாள் வாசிப்போர் வாய்வழிச் செய்தி வாசிப்போர் வரை அனைவரும் அறிவர்.அதை திரையில் வீரியமாகக்
படத்தின் பெயரே இது விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதைச் சொல்லிவிடுகிறது.இந்தப் பெயரை வைத்துக் கொண்டு, கிராமத்தில் நடக்கும் மட்டைப்பந்து விளையாட்டுப் போட்டிகள்,அங்குள்ள வீரர்களுக்குள் நடக்கும் தன்முனைப்பு யுத்தம்,இவற்றிற்கிடையே ஒரு காதல், சாதியப்பாகுபாடு மற்றும் அதன் விளைவுகள் ஆகியனவற்றை உறுத்தாமல் தொகுத்துச் சொல்லியிருக்கும் படம் லப்பர் பந்து. ஹரீஷ்கல்யாண்
























