விஜய்யின் மாஸ்டர் படத்தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாபிரிட்டோவுக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. மருமகனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தார் மாமனார் சேவியர் பிரிட்டோ. அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர்
செய்திகள்
விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு சென்னை ஈவிபி அரங்கில் நடந்துகொண்டிருக்கிறது.ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாம். அதில் விஜய் நடனமாடிக் கொண்டிருந்திருக்கிறார்.வெட்ட வெளியில் நடந்த அப்படப்பிடிப்பை டிரோன் மூலம் படம்பிடித்திருக்கிறது ஒரு தனியார் தொலைக்காட்சி. படப்பிடிப்பு நடக்கும்போது அங்கு புகைப்படம் கூட எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
நேற்று நடிகர் தனுஷ் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி மற்றும் தயாரிப்பாளர் அம்பேத்குமார் ஆகியோர் சந்திப்பு நடந்திருக்கிறது. எதற்காக இந்தத் திடீர் சந்திப்பு? என்ன நடந்தது? தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, தயாரிப்பாளர் அம்பேத்குமார் மூலம் ஒரு கதை கேட்டிருக்கிறார். அக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாம். இந்தக்கதையில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன். முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல்பாகத்தை முடிக்கும்போதே இரண்டாம்பாகத்தையும் இறுதி செய்துவிட்டார் மணிரத்னம். அதை அப்படியே வெளியிட்டுவிடுவதுதான் திட்டம். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் முதல்பாகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால்,ஏற்கெனவே வேண்டாமென நிறுத்தி வைத்த
2021 ஜூன் 24 ஆம் தேதியன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில்….. ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் – கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு “அதிகாரம்” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் – வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப்
விஜய்யின் வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமை லலித்குமாரின் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ பெற்றுள்ளது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. தமிழ்நாடு உரிமை அவர் வாங்கினாலும், சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் கோவை ஆகிய ஐந்து விநியோகப் பகுதிகளில் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்கிறார்கள். மீதமுள்ள திருச்சி,சேலம்,
2023 பொங்கலையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இருபடங்களும் வெளியாகின்றன. இதனால் தமிழ்த் திரையுலகமே பரபரப்பாக இருக்கிறது. அதற்குக் காரணம், துணிவு படத்தை உதயநிதி வெளியிடுவதுதான். அவர் ஒரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அந்தப் படத்துக்குத்தான் திரையரங்குக்காரர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். அவர் ஆளும்கட்சிக்காரர் என்பதால் அல்ல. அவர் வெளியிடும்
விஜய்சேதுபதி, சூரி, கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.தொடங்கும்போது, ஐம்பதிலிருந்து அறுபதுநாட்கள்தாம் படப்பிடிப்பு இருக்குமென்று சொல்லப்பட்டது. ஆனால்,
களவாணி,வாகைசூடவா, நய்யாண்டி, மஞ்சப்பை,சண்டிவீரன்,களவாணி 2 ஆகிய படங்களை இயக்கிய சற்குணம், தற்போது இயக்கியிருக்கும் படம் பட்டத்து அரசன். ராஜ்கிரண், அதர்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தில் நடிகை ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்கிறார்.கன்னடத்தில் புகழ்பெற்றிருக்கும் அவர் இந்தப்படம் தமிழில் அறிமுகமாகிறார்.இவர்களோடு ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், ராஜ்
சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். இப்படத்தை ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் வெளியானது. நவீன் பாலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.அந்தப் படத்தின் தமிழாக்கம்தான் ஏஜெண்ட் கண்ணாயிரம். ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் நடிகை ரியா





















