Home Archive by category செய்திகள் (Page 76)

செய்திகள்

சினிமா செய்திகள்

நயன்தாரா படம் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை – தொடரும் சிக்கல்

நேரம்,பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் ஏழாண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் படம் கோல்டு. இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல், செம்பன் வினோத் உட்பட பல நடிகர்கள் படத்தில் இருக்கின்றனர். ஆனந்த் சி.சந்திரன், விஸ்வஜித்
சினிமா செய்திகள்

பணம் கேட்டு மிரட்டும் வளர்ப்புமகள் -வேதனையில் ராஜ்கிரண்

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டுகிறாராம். பணம் கொடுக்கவில்லையென்றால் உங்கள் பெயரை அசிங்கப்படுத்தி விடுவேன். சமூக வலைத்தளம் மூலம் மக்களிடம் உங்களுடைய நன் மதிப்பை அழித்துவிடுவேன் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி வளர்ப்புமகளாக இருந்தபோதும் தங்களது சொந்த மகள் போலத்தான் வளர்த்தார்கள். நன்கு படிக்கவைத்து
சினிமா செய்திகள்

நயன்தாரா பட சிக்கல் – 90 இலட்சம் தப்பிக்குமா? தயாரிப்பாளர் தவிப்பு

நிவின்பாலி, சாய்பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் பிரேமம்.அப்படத்துக்குப் பிறகு ஏழாண்டுகள் கழித்து இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் கோல்டு. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல், செம்பன் வினோத் உட்பட பல நடிகர்கள் படத்தில்
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் சொன்ன பதில் தயாரிப்பாளர் அதிர்ச்சி – விடுதலை பட சோகம்

வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி, கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை.இப்படத்துக்கு இசை இளையராஜா. ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதிகபட்சம் அறுபது நாட்கள் படப்பிடிப்பு உடனே வெளியீடு என்று பேசித் தொடங்கப்பட்ட இப்படம் இன்னும் முடியவில்லை. முதலில் கதாநாயகன்
சினிமா செய்திகள்

விஜய் படத்துக்காக லோகேஷ்கனகராஜ் கொடுத்துள்ள பெரும்தொகை – ஆச்சரிய தகவல்

தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை செவன்ஸ்கிரின் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது. இந்தப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் வில்லன்களாக இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் இயக்குநர் கெளதம்மேனன் அல்லது இயக்குநர்
சினிமா செய்திகள்

ஜெயிலர் படத்தில் அதிருப்தி ரஜினிகாந்த் வேதனை

ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து டான் பட இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மூத்த இயக்குநர்களுடன் இணைவதைவிட இதுபோன்ற புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதுதான் நல்லது என நினைத்து இவற்றை ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சினிமா செய்திகள்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் – லத்தி பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் லத்தி.இது விஷாலின் 32 ஆவது படம். இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார்.சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா. இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
சினிமா செய்திகள்

தனுஷ் எச்.வினோத் இணையும் புதிய படம் – விவரங்கள்

தனுஷ் இப்போது அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் ஆகியனவற்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.இவற்றில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் படத்தை அவரே இயக்கி நடிக்கப்போவதாகத் தகவல். இவற்றிற்கிடையே இன்னொரு புதியபடத்தில் நடிக்க அவர்
சினிமா செய்திகள்

உலக அளவில் வாரிசு துணிவு கடும்போட்டி – என்ன நடக்கிறது?

2023 தமிழர் திருநாளையொட்டி வெளியாகவிருக்கும் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கிடையேயான போட்டிதான் இப்போதைய சூடான செய்தி. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் இந்தப் போட்டி கடுமையாக இருக்கிறதாம். வாரிசு படத்தின் வெளிநாட்டு உரிமை 32 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. துணிவு படத்தின் வெளிநாட்டு விலை 17 கோடி என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வாரிசு
சினிமா செய்திகள்

மஞ்சிமாமோகன் மீது காதல் கொண்டது எப்படி? – கவுதம் கார்த்திக் வெளிப்படை

தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் முத்துராமனின் பேரனும் நடிகர் கார்த்திக்கின் மகனுமான கவுதம்கார்த்திக், 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் கால் பதித்தார். அதன்பின் நிறையப் படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது, 1947 மற்றும் பத்துதல ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளத் திரையுலகில், 1997 முதல் குழந்தை