சினிமா செய்திகள்

இழுத்தடிக்கும் நயன்தாரா – மனம் நொந்த இயக்குநர்

முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாஜியின் மகன் சசிகாந்த் திரைப்படத் தயாரிப்பாளராக உள்ளார்.அவருடைய நிறுவனம் ஒய்நாட் ஸ்டுடியோஸ்.

2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் என்கிற படம் அந்நிறுவனத்தின் முதல்படம்.

அதன்பின், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா அண்மையில் வெளியாகி தேசியவிருது பெற்ற மண்டேலா உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளது அந்நிறுவனம்.

தயாரிப்பாளராக இருக்கும் அவர் இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

அவர் இயக்கவிருக்கும் படத்தில் மாதவன், சித்தார்த் ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்கவிருக்கிறார்கள்.அந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சனவரி மாதத்தில் தொடங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தொடங்கவில்லை.

அதற்குக் காரணம் நயன்தாரா தானாம். அவர் இந்தப்படத்துக்குக் கொடுப்பதாகச் சொன்ன தேதிகளில் அட்லி இயக்கும் ஜவான் படப்பிடிப்பு இருக்கிறது என்று சொல்லி அங்கே போய்விட்டாராம்.எப்போது இந்தப்படத்துக்கு வருவார் என்றும் சரியாகச் சொல்லவில்லையாம்.

பலமுறை பேசிய பின் நயன்தாராவின் தேதிகள் உத்தேசமாகச் சொல்லப்பட்டதாம். ஆனால் அந்தத் தேதிகளில் மாதவன் வேறுபடத்துக்குப் போய்விட்டாராம்.

இதனால் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள்.

கதை திரைக்கதையை முழுமையாக்கி வைத்துக் கொண்டு படப்பிடிப்பில் போய் இயக்குநர் வேலை செய்யலாம் என ஆவலாகக் காத்திருந்த சசிகாந்த், பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருப்பதால் மனம் நொந்திருக்கிறாராம்.

சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா!

Related Posts