சினிமா செய்திகள்

வெளியீட்டுக்கு முன்பே இலாபம் – ஐஸ்வர்யாராஜேஷ் படக்குழு மகிழ்ச்சி

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கின்றன.

அவரை முதன்மையாக வைத்து இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சொப்பன சுந்தரி’.

இப்படத்தில் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைக்கிறார்.

குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தணிக்கையில் யு சான்று பெற்றுள்ள இப்படம் ஏப்ரல் 14 அன்று வெளியாகவுள்ளது.

அதற்கு முன்பாகவே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்பான இணைய ஒளிபரப்பு உரிமையும் பெரிய தொகைக்கு விற்பனையாகி படத்தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது. அதற்காக அத்தொலைக்காட்சி கொடுத்துள்ள தொகை சுமார் ஒன்றரைகோடி என்று சொல்லப்படுகிறது.

திரையரங்க வெளியீட்டுக்குப் பின்பான இணைய ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றிருக்கிறது. இதற்காக அந்நிறுவனம் கொடுத்துள்ள தொகை சுமார் நான்குகோடி என்று சொல்லப்படுகிறது.

ஆக மொத்தம் ஐந்தரை கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்திருக்கிறது.

இதனால் இப்படம் வெளியீட்டுக்கு முன்பே இலாபத்தை அடைந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இதேபோல் இதற்கு முன்பு ஐஸ்வர்யாராஜேஷ் நடித்த டிரைவர்ஜமுனா படமும் தொலைக்காட்சி மற்றும் இணையஒளிபரப்பு உரிமையில் பெருந்தொகையைப் பெற்று அந்தப்படத்தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியது.

இதனால் ஐஸ்வர்யாராஜேஷை வைத்துப் படமெடுப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.அவரை முன்னிலைப்படுத்திப் படமெடுக்க இன்னும் பலர் முன்வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts