விஜய் ஆண்டனி மகள் தற்கொலை – அதிர்ச்சித் தகவல்
நடிகர் விஜய் ஆண்டனி, மனைவி பாத்திமா மகள்கள் மீரா,லாரா ஆகியோர் கொண்ட குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் 16 வயது நிரம்பிய மூத்த மகள் மீரா, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
நேற்று இரவு உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை வீட்டின் பணியாளர் பார்த்து அலறியுள்ளார்.
இதன்பின் காவேரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு சொல்லப்பட்டிருக்கிறார். அங்கு, சிறுமி மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வின்போது நடிகர் விஜய் ஆண்டனி வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வறியும் அனைவரும் கடும் அதிர்ச்சியி்ல் உறைகின்றனர்.











