சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ?

சூர்யா,ஆர்யா,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த காப்பான் படம் 2019 செப்டெம்பரில் வெளீயானது. அப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.

அதற்கடுத்து அவர் இயக்கும் படம் பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லை.

அதேசமயம் அவர் அடுத்த படத்துக்கான கதை எழுதி திரைக்கதையையும் தயார் செய்துவிட்டாராம்.

அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். அந்நிறுவனத்தினருக்கு கே.வி.ஆனந்த்தின் கதை பிடித்துவிட்டதாம்.

அதற்கான நாயகன் யார்? எனும் கேள்வி வந்தபோது, சிவகார்த்திகேயன் இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதனால் அவரிடம் அதுகுறித்துப் பேசியிருக்கிறார்களாம். அநேகமாக அவர் ஒப்புக்கொள்வார், அவருடைய அடுத்த படம் அதுவாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கடுத்து அவர் இந்தப்படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பாகவே கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்ததென்றும் அப்போதைய சூழலில் அவர்கள் இருவரும் இணையமுடியாமல் போய்விட்டதெனவும் சொல்லப்பட்டது.

இந்தமுறை நிச்சயம் அவர்கள் இணைவார்கள் என்று சொல்கிறார்கள். 

பார்ப்போம்.

Related Posts