சினிமா செய்திகள்

சர்ச்சைக்குப் பின் ஆண்ட்ரியா நடிக்கும் படம்

பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா நடிப்பில் சில படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படங்களில் சுந்தர்.சியின் அரண்மனை 3 படம் வேகமாக வளர்ந்திருக்கிறது. மற்ற படங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஒரு அரசியல் வாரிசு நடிகர் தொடர்பாக ஆண்ட்ரியா வெளீயிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சில இணையதளத் தொடர்கள் மற்றும் குறும்படங்களில் அவர் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்தன.

இப்போது, பிரபல இணைய நிறுவனத்துக்காக ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்கும் குறும்படத்தில் நாயகியாக நடிக்க ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று முடிவடையும் என்பதால் விரைவில் ஆண்ட்ரியாவைத் திரையில் பார்க்கலாம் என்கிறார்கள்.

Related Posts