சினிமா செய்திகள்

நான்கு நாட்கள் காணாமல் போன விஷால் – படக்குழுவினர் பரிதவிப்பு

அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் நடந்துவருகிறது. 

சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா பகுதியை அரங்கமாக அமைத்து அதில் படத்தின் தொடக்கப்பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது.கதைக்களம் சிங்கப்பூர் என்பதால் அந்நகரம் போல் அரங்குகள் அமைத்து அவற்றில் படப்பிடிப்பு நடந்துவருகிறதாம்.

அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு நவம்பர் மூன்றாம் தேதி நிறைவடையும் என்றார்கள். 
ஆனால் திட்டமிட்டபடி இல்லாமல் மேலும் சில நாட்கள் படப்பிடிப்பு நீண்டிருக்கிறது.
அதற்குக் காரணம் விஷால்தான் என்கிறார்கள். 

மொத்தப் படக்குழுவும் படப்பிடிப்புத்தளத்தில் காத்திருந்தும் அவர் படப்பிடிப்புக்கு வரவில்லையாம். இப்படி நான்கு நாட்கள் தொடர்ச்சியாக அவர் வராமல் போனதால்தான் திட்டமிட்டபடி முடிக்கமுடியாமல் நீண்டிருக்கிறது என்கிறார்கள்.

நான்கு நாட்களும் விடுதி அறையிலேயே அவர் இருந்தார் என்றும் விடுதி அறையில் அவர் இல்லை எங்கு போனாரென்றே தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

எப்படியிருப்பினும் அவரும் ஒரு தயாரிப்பாளராக இருப்பவர், தயாரிப்பாளரின் கஷ்டங்கள் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்தவர்.படக்குழுவினர் மொத்தப்பேரும் வந்த பிறகு படப்பிடிப்பு நடக்கவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும்  நான்கு நாட்கள் படப்பிடிப்புக்கு வராமல் ஏமாற்றியிருக்கிறார்.

இதனால் விஷால் மீது படக்குழுவினர் கடும் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.  

Related Posts