சினிமா செய்திகள்

நயன்தாரா பரிந்துரையை நிராகரித்த விஜய்

விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது.ஆனால் சம்பளச் சிக்கல் காரணமாக அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

அதன்பின் விஜய்யின் 65 ஆவது படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.ஆனால் மகிழ்திருமேனியோ உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இன்னும் சில நாட்களில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் விஜய் 65 இன் இயக்குநராக நெல்சன் தேர்வாகிவிட்டார் என்கிறார்கள்.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடநது கொண்டிருக்கிறது.

டாக்டர் படப்பிடிப்புக்கு நடுவே நெல்சன், விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். அக்கதை விஜய்க்குப் பிடித்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் படம் முடிந்ததும் நெல்சன் படத்தைத் தொடங்கலாம் என்று விஜய் சொல்லியிருந்தாராம்.

அதற்குள் விஜய் 65 இல் ஏ.ஆர்.முருகதாஸ் இல்லை என்றாகிவிட்டது. இதனால் விஜய் 65 படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த முடிவு எட்டப்படுவதற்கு முன்பாக நயன்தாரா ஒரு முயற்சி எடுத்தாராம். அவர் விஜய்யைத் தொடர்பு கொண்டு விக்னேஷ்சிவன் உங்களுக்கான கதை வைத்திருக்கிறார். அந்தக் கதையைக் கேட்டு அவரை விஜய் 65 இன் இயக்குநராக்குங்கள் என்று கோரியதாகச் சொல்லப்படுகிறது.

விக்னேஷ்சிவன் படங்களில் ஏராளமான இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும் என்பதாலேயே விக்னேஷ்சிவனை விஜய்க்குப் பிடிக்காது என்பார்கள். எனவே, இப்போது நயன்தாராவே நேரடியாகக் கேட்டும் விக்னேஷ்சிவனை விஜய் நிராகரித்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.

Related Posts