October 16, 2026
சினிமா செய்திகள்

ஏமாந்த சிம்பு சிவகார்த்திகேயன் முந்திய முக்கியப்புள்ளி

இவ்வாண்டுத் தொடக்கத்தில் சனவரி 12 ஆம் தேதி வெளியான தெலுங்குப்படம் அலா வைகுந்தபுரம்லோ.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

சனவரி 12 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.அதோடு தெலுங்குத் திரையுலகில் பெரும் வசூல் சாதனையையும் நிகழ்த்தியது.

ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தப்படம் சன் குழுமத்தைச் சேர்ந்த ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அப்போதும் மிக மிக அதிகப் பார்வையாளர்களைப் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

இப்படத்தின் தமிழ் மொழிமாற்று உரிமையைக் கைப்பற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் நிறுவனங்கள் போட்டியிட்டன.

இயக்க்குநர் மோகன்ராஜா தன் தம்பி ஜெயம்ரவியை வைத்து இந்தப்படத்தைத் தமிழில் எடுக்க விரும்பி உரிமை கேட்டாராம்.

லைகா நிறுவனம் இப்படத்தின் தமிழாக்க உரிம்மையைக் கேட்டு அணுகியதாம். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டிருப்பதாகவும், அதனால் இந்தப்படத்தின் மொழிமாற்றில் அவரை நடிக்க வைக்கிறோம் என்று சொல்லியே அந்நிறுவனம் கேட்டிருந்ததாம்.

இவர்கள் மட்டுமின்றி, நடிகர் விக்ரம் தன் மகன் துருவ் விக்ரமுக்காக இந்தப்படத்தின் தமிழ் உரிமையைக் கேட்டிருந்தாராம்.

இந்தப்படத்தைத் தமிழில் எடுக்கும் உரிமை வாங்குகிறேன் நீங்கள் நடிக்கவேண்டும் என்று கேட்டு சிம்புவை ஒரு தயாரிப்பாளர் துரத்திக்கொண்டிருந்தார்.

இப்படிப் பல பெரிய ஆட்கள் கேட்பதால் தமிழாக்க உரிமைக்கான விலையைப் பல மடங்கு உயர்த்தியது தெலுங்குப் பட நிறுவனம்.

ஆனால் இவை எதுவுமே நடக்காமல் யாரும் எதிர்பாராத வேறொன்று நடந்துகொண்டிருக்கிறது.

ஆம், இந்தப்படத்தை தமிழில் குரல் மாற்று (டப்பிங்) செய்து கொண்டிருக்கிறார்களாம்.

இப்படத்துக்கான தமிழ் வசனங்களை இயக்குநர் விஜய்பாலாஜியும் தமிழில் பாடல்களை பா.விஜய்யும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழில் இந்தப்படத்துக்கு வைகுண்டபுரம் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

அப்புறம் முக்கிமான விசயம் இந்தப்படம் நவம்பர் 14 தீபாவளி நாளன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறதாம்.

மக்களுக்குக் கொண்டாட்டம்தான்.

Related Posts