சினிமா செய்திகள் நடிகை

பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகை கஸ்தூரி, செய்த தவறு என்ன?

விழுப்புரம் மாவட்டம் – வெள்ளம்புதூர் காலனியில் நிகழ்ந்த படுகொலை, ‘சாதிவெறிப் படுகொலை’ என்றும், அதற்குக் ‘காரணம் வன்னியர்கள்’ என்றும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில்,

பாவிகளா பாவிகளா கொன்னு புடுங்கின மண்ணை திங்கவா முடியும், இந்தப் படங்களைப் பார்க்கும்பொழுது பெண்ணாய் பதறுகிறேன்,தாயாக கதறுகிறேன். மண்ணுக்காக மனிதத்தை இழந்த சாதிவெறி நாய்களா உங்க பிள்ளைங்க மட்டும் விளங்கிருவாங்களா நாசமா போவீங்க என்று எழுதி ஹேஸ்டாக்கில் வன்னியர் அனிமல்ஸ் என்று போட்டிருந்தார்.

இந்த ட்வீட்டைத் தொடர்ந்து கஸ்தூரிக்குக் கடும் எதிர்ப்புகள் வந்துவிட்டனவாம். அதனால்,

பிழைக்கு வருந்துகிறேன். மன்னித்துவிடுங்கள்.
வேலாம்புதூர் படுகொலை குறித்து முந்தைய கீச்சில் ‘அன்னியக்கும்பல்”, Anniyar, என்பதற்கு பதில் “Vanniyar” என்று எழுத்துப்பிழை காரணத்தால், அந்த கீச்சை நீக்குகிறேன்.
அந்த கீச்சை யாரும் SS எடுத்து தொடர்ந்து பகிரமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

என்று ட்வீட் போட்டார். ஆனாலும் அவர்கள் சமாதானமடையவில்லை போலும், கொஞ்ச நேரத்தில்,

இடைவிடாது என்னை தொலைபேசி வாயிலாக வாழ்த்தி கொண்டிருக்கும் நல்லுள்ளங்களை பாராட்ட வார்த்தை இல்லை .

அமைதி தூதுவர்களை வணங்குகிறேன்.

என்று ட்வீட் போட்டிருக்கிறார்.

Related Posts