நீட் தேர்வுச் சிக்கல், ஐபிஎல் ஆகியனவற்றுக்கு இணையாக ஹேப்பிபர்த்டே மணிமேகலை என்கிற ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டாக இருக்கிறது. அதில் போய்ப்பார்த்தால், ரஜினி, அஜித், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களின் ரசிகர்கள் மணிமேகலைக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். ஒரு தொகுப்பாளினிக்கு இவ்வளவு
செய்திகள்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் இரும்புத்திரை. மே 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படம் பற்றியும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார் படத்தின் நாயகி சமந்தா. அவர் பேசியதிலிருந்து…. இரும்புத்திரை படத்தின் கதையைக் கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம்
1993 ஜூலை 30 ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்த ஜெண்டில்மேன் படம் வெளியானது. முதல்படமே வெற்றி என்றதோடு பிரமாண்ட இயக்குநர் என்கிற பெயரையும் அவ்ருக்குக் கொடுத்தது. உலக அதிசயங்களையெல்லாம் காட்சிப் படுத்திய ஜீன்ஸ், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்த இந்தியன், முதல்வன் போன்று அவருடைய படங்கள் எல்லாமே கவனிக்கத்தக்கவை. ரஜினியை வைத்து இவர் இயக்கிய
எம்ஐடி எனப்படும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில், யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்’ எனும் போட்டியில் எம்ஐடி வெற்றி பெறுவதற்காக அஜித் உதவுகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தப்
மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்துக்கு 48 ஆவது பிறந்த நாள். அதையொட்டி, இயக்குநர் சுசீந்திரன் அஜித் பற்றி ஒரு புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார். “நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, எனது நண்பன் உதவி இயக்குநர் ரோஜா ரமணன் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய ஆபரேஷனுக்கு மூன்று லட்ச ரூபாய் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும்
இப்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் பாடல்கள் மே 9 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்காக விழா எடுக்கப் போகிறார்களா? அல்லது இணையதளங்களில் வெளியிடப்போகிரார்களா? என்று சொல்லவில்லை. என்ன நடக்கும்? இணையதளங்களில் பாடலை வெளியிட்டுவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறர்கள். ஆனால், இயக்குநர் ரஞ்சித்தோ கபாலியிலும் பெரிதாகச் செய்யவில்லை,
ஐந்து படங்கள் மட்டுமே நடித்து உலகப்புகழ் பெற்ற புரூஸ்லீ 1973. ஜூலை 20 அன்று மரணம் அடைந்தார்.அவர் புகழின் உச்சியில் இருக்கும்போது அந்த மரணம் நடந்தது. மரணத்தின்போது அவரின் வயது 32 மட்டுமே. மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் இன்னும் மங்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக உருவாகியிருக்கும் படம் புதிய புரூஸ்லீ. ஏ.சோணை என்பவர் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் புரூஸ்லீ
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் பாடல்கள் மே 9 ஆம்நா தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பாடல் மே 1ம் தேதி வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். செம் வெயிட்டு கனம் தொடங்கும் அந்தப் பாடல் நாளை மாலை 7 மணிக்கு வெளியிடப்படுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆபாசப்பட இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. இந்தப்படம் பற்றி பேசிய இயக்குநர், இப்படியான படங்களை எடுத்து ஏன் திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜேனர். உலக





















