தமிழீழத்தலைவர் பிரபாகரன் வேடத்தில் ரஜினி – இன்ப அதிர்ச்சி தரும் காலா

காலா படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இதற்காக உலகம் முழுக்க காலா படம் அனுப்பப்பட்டிருக்கிறது.
அங்கிருந்து வரும் தகவல்கள் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கின்றன.
தமிழகத்தின் திருநெல்வேலியிலிருந்து மும்பை செல்லும் ஒரு தமிழர் அங்குள்ள மக்களுக்காகப் போராடுவதுதான் காலா படத்தின் மையக்கதை என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ரஜினி அந்த வேடத்தில் நடித்திருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மும்பையின் தாராவி என்கிற சிறு பகுதியின் தலைவராக இருக்கும் ஒருவரை பத்துக்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் , அரசு அதிகாரம், மற்றும் அரசியல் அதிகாரம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து எப்படி எதிர்க்கின்றன? என்பதுதான் படத்தின் திரைக்கதை என்று சொல்கிறார்கள்.
இது ஈழத்தின் இறுதிப் போர்க்களத்தை அப்படியே பிரதியெடுத்தது போல் இருக்கிறதென்கிறார்கள்.
ரஜினியை தமிழீழத் தலைவர் பிரபாகரன் போல் சித்தரித்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு அனைவரும் மகிழும் வகையில் தலைவர் இருக்கிறார் என்று சொல்லியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இதனால் இந்தப்படத்துக்கு உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் உறுதியான நம்பிக்கையில் இருக்கிறார்களாம்.
ஈழத்தின் இறுதிப்போர்க்களக் கொடுமைகளைக் காட்சிப்படுத்தியிருக்கும் ரஞ்சித்துக்கும் அதில் நடிக்க ஒப்புக்கொண்ட ரஜினிக்கும் பெரும் பாராட்டு கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.