திடீரென வெளியானது அஜீத் 60 படத்தின் பெயர்
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த நேர்கொண்டபார்வை படம் வெளியானது. ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருந்தார்.
அப்படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்தையும் இதே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என்றும் இதே இயக்குநர் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
அதன்பின் அந்தப்படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.
இந்நிலையில் இன்று திடீரென இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா தன்னுடைய ட்விட்டரில், அஜீத் 60 படத்தின் பெயர் வலிமை, மீண்டும் அதே குழுவுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று அறிவித்திருக்கிறார்.
படத்தயாரிப்பு நிறுவனமோ நடிகர் அஜீத்தோ அல்லது இயக்குநர் வினோத்தோ இதைச் சொல்லாமல் இசையமைப்பாளர் யுவன் இதை அறிவித்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.











