சினிமா செய்திகள் நடிகர்

மவுனப் போராட்டத்தில் சத்யராஜ் மட்டும் பேசியது எப்படி தெரியுமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுன போராட்டம் இன்று (ஏப்ரல் 8.2018) காலை 9 மணி ,உதல் மதியம் 1 மணி வரை நடந்தது.

இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,கமல், ரஜினி, விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி, சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, பிரசாந்த், சத்யராஜ், பார்த்திபன், விவேக், உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டம் தொடங்கும்போது, நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்பொழுது, சுயநலமற்று போராடி வரும் அனைவரையும் தமிழ்த் திரையுலகம் வணங்குகிறது. தமிழக அரசின் கோரிக்கைக்கு செவிசாய்த்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராட்டம் நடத்துவது நமது கடமை. மக்களுக்குக் கேடு விளைவிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தக் கூடாது. திரையுலகம் பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், மக்களுக்காகப் போராடுவது முக்கியம் என கருதியதால் போராட்டம் நடத்துகிறோம். காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக இன்று மௌன அறவழிப் போராட்டம் எனப் பேசினார்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திரையுலகினரின் மவுன அறவழிப்போராட்டத்தில் நடிகர் சத்யராஜ் மட்டும் பேசினார். அவர்,

நாம் என்றுமே தமிழர்களின் பக்கம், தமிழ் உணர்வுகளின் பக்கம். இயற்கை அன்னை கொடுத்த வளத்தை அரசியலாக்கிக் கெடுக்க வேண்டாம். எந்த அரசாக இருந்தாலும், ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம். குரல் கொடுக்க தைரியம் இருந்தால் வாருங்கள். இல்லை என்றால் ஒளிந்துகொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மவுனப் போராட்டம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லப்பட்ட போராட்டத்தில் சத்யராஜ் மட்டும் பேசியது எப்படி?

உதவி இயக்குநர் பாலமுரளிவர்மன் இதுபற்றிக் கூறியிருக்கிறார். அவர்,

இன்று திரைத்துறையினர் கலந்துகொண்ட நிகழ்ச்சி
ஆம் அது ஒரு நிகழ்ச்சி தான்.

அதை போராட்டமென்று சொல்லி காவிரிக்காக தமிழர் உரிமைக்காக நடைபெறும் போராட்டங்களை கொச்சைப் படுத்திவிடக்கூடாது.

எனினும் காவிரியின் பெயராலான அந்த ஒன்றுகூடலில் நமக்கான குரல் ஒலிக்கவேண்டும் என்று
நினைத்தேன்.

முன்னதாக மத்திய மாநில அரசுக்கெதிராக முழக்கங்கள்
எழுப்பியபோதே என்னிடம் வந்து மத்திய அரசைத் திட்டாதீர்கள் என்றார்கள்.

இறுதி வரை இவர்கள் சொதப்பல்சுந்தரிகளாக மேடையில் நெளிந்தது கண்டு பொறுக்கமுடியாமல் தான்,

சத்யராஜை பேசச்சொல்லுங்கள்,சத்யராஜ் பேசியே தீரவேண்டும்,இங்கே தமிழர்குரல் ஒலித்தே ஆகவேண்டும் என்று கத்தி குரல் கொடுத்தேன்.

உள் நோக்கதுடன் மவுன நிகழ்ச்சியாக்கிவிட்ட சில
நரிகளின் தந்திரத்தை முறியடித்து பேசவைத்தேன்.

அவரும்
தம்பிகளுக்கு நன்றி.
நான் எப்போதும் எந்த சூழலிலும் தமிழர்களுக்காக நிற்பேன்.இருந்தாலும்சபை நாகரிகம் கருதி நாம் அனைவரும்
என்று தொடங்கவே,தமிழன் நாமதான் நாகரிகம் பாக்குறோம்
வேற எவன் பாக்குறான், நீங்க பேசணும் பேசணும் என்று கத்தினேன்.

திரைத்துறையில் இருக்கும் மானத்தமிழ்த்தம்பிகள், முத்து,சண்முகம்,கனியரசு,கதிர்,சுகுமார் அழகர்சாமி,
விருமாண்டி மற்றும் உணர்வாளர்கள் என் குரலை வலுப்படுத்தினார்கள்.

குரல்கள் வலுக்கவே சில நரிகளுக்கு வேறு வழியில்லாமல் போனது.

ராணுவமே வந்தாலும் பின்வாங்கமாட்டோம் என்று
தமிழர் சத்யராஜ் முழங்கினார்.அவர் முடித்ததும் இந்திய
தேசிய கீதத்தைப் புறக்கணித்து
வெளியேறினோம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

உண்மையான போராட்ட உணர்வுள்ள சிலரின் போராட்டத்தால் மவுனம் உடைந்து சத்யராஜ் பேசியிருக்கிறார்,

Related Posts