Uncategorized சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கும் படம்

2019 ஆம் ஆண்டு ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது.

இந்தப் படத்தை தமிழில் எடுக்கவிருக்கின்றனர். இதன் தமிழ் மொழிமாற்று உரிமையை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பெற்றிருக்கிறார்.

கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்க அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கவிருக்கிறார்கள்.இவர்களில் சபரி, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இந்தியாவில் இருக்கும் அப்பாவுக்கும் வெளிநாட்டில் வேலை செய்யும் மகனுக்குமான பாசப்போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

இப்படத்தைத் தயாரிப்பதோடு அப்பா வேடத்தில் கே.எஸ்.ரவிகுமாரே நடிக்கவிருக்கிறாராம். மகனாக பிக்பாஸ் புகழ் தர்சன் நடிக்கவிருக்கிறார். யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts