September 23, 2023
சினிமா செய்திகள்

ஜெயம்ரவி 30 படத்தின் பெயர் இதுதான்?

ஜெயம்ரவி நடித்துள்ள இறைவன் படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தப்படத்தை அகமது இயக்கியிருக்கிறார். பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இதற்கடுத்து நான்கு படங்கள் இருக்கின்றன.

புதுஇயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில்
சைரன் படத்தில் நடித்துள்ளார்.அப்படத்தை ஜெயம்ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.

இப்போது, அர்ஜூன் ஜெ.ஆர் இயக்கும் ஜீனி படமும் தயாராகிக் கொண்டிருக்கிறது.இந்தப்படத்தை ஐசரிகணேஷின் வேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப் படங்களோடு எம்.ராஜேஷ் இயக்கும் படமொன்றிலும் நடித்துள்ளார்.

ஜெயம்ரவி 30 என்றழைக்கப்படும் அந்தப்படத்தில் அவருக்கு இணையராக பிரியங்காமோகன் நடித்துள்ளார்.பூமிகா, சரண்யாபொன்வண்ணன்,விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இறைவன் படத்தைத் தொடர்ந்து சைரன் படம் வெளியாகும் என்றும் அதற்கடுத்து எம்.ராஜேஷ் இயக்கும் படம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், அப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப்படத்துக்கு பிரதர் என்று பெயரிட்டிருக்கிறார்களாம். அதைத்தான் அறிவிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இம்மூன்று படங்களுக்கு அடுத்து, மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் தனிஒருவன் 2 படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Posts