ரஜினியின் 2 ஓ படத்தின் டீசர் திருடப்பட்டது எப்படி? – புதிய தகவல்கள்
சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘2.0’. கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தை, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறார்கள்.
இந்திப்படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் துபாயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
மற்றொரு பிரமாண்ட விழாவில் படத்தின் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியிருக்கிறது.
அடுத்தடுத்து ரஜினிகாந்த்தின் இரண்டு படங்களின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பே கசிந்திருப்பது, திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளிவந்த அந்த டீசர் ஏதோ ஒரு வெளிநாட்டில் எல்.ஈ.டி-யில் திரையிடப்பட்டபோது, கேமரா மூலமாக எடுக்கப்பட்டிருக்கிறது. முழுமையற்ற டீசராக அது இருந்தது.
இது இலண்டனில் மார்ச் 2 ஆம் தேதி நடந்த லைகாநிறுவனர் சுபாஷ்கரன் பிறந்தநாள் விழாவின் போது திரையிடப்பட்டதாம். தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்துகொண்ட இந்நிகழ்விலிருந்துதான் அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர் வீட்டிலிருந்தே டீசர் திருடப்பட்டதால் எதுவும் செய்யமுடியாமல் தடுமாறுகிறார்களாம்.











