காலாவுடன் இணைந்த துருவநட்சத்திரம்
பல்வேறு சிக்கல்களுடன் நாளை திரைக்கு வரவிருக்கிறது காலா திரைப்படம்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரிராவ் நடித்திருக்கிறார். படத்தில் வில்லனாக நானா படேகர் நடித்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் படத்துக்குப் பெரும் பலமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
இப்படம் வெளியாகும் அனைத்துத் திரையரங்குகளிலும், கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் திரையிடப்படவிருக்கிறதாம்.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப்படத்தில் லைகா நிறுவனமும் இணைந்துள்ளதால், அந்நிறுவனம் வெளியிடும் காலா திரைப்படத்தோடு துருவநட்சத்திரம் டீசர் இணைக்கப்பட்டிருக்கிறதாம்.
நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள துருவநட்சத்திரம் பட டீசர், காலா படத்தோடு இணைவதால் இருதரப்பு ரசிகர்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கும்.











