சினிமா செய்திகள்

குபேராவுடன் மோதும் டி என் ஏ – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

ஒரு நாள் கூத்து,மான்ஸ்டர்,ஃபர்ஹானா ஆகிய படங்களின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்
டி என் ஏ.இப்படத்தில் அதர்வா முரளி,நிமிஷா சஜயன்,பாலாஜி சக்திவேல்,ரமேஷ் திலக்,விஜி சந்திரசேகர்,சேத்தன்,ரித்விகா,கே பி, சுப்பிரமணியம் சிவா,கருணாகரன்,பசங்க சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் – சத்ய பிரகாஷ் – அனல் ஆகாஷ் – பிரவீண் சைவி – சஹி சிவா- ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்புப் பணிகளை வி.ஜே.சபு ஜோசப் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர் மேற்கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்திருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் வழங்குகிறார்.

திவ்யா – ஆனந்த் எனும் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்களின் உளவியலும், வாழ்வியலும் தான் இப்படத்தின் பிரதான அம்சம். இவர்கள் இருவரும் தினமும் பல காரணங்களால் இந்தச் சமூகத்தினரால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.‌காயப்படுத்தப்பட்ட இந்த இரண்டு ஆன்மாக்களும் உணர்வுபூர்வமான தருணத்தில் சந்திக்கிறார்கள்.அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்தின் குறுமுன்னோட்டம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்தப்படத்தை வெளியிட முன்னணி விநியோகஸ்தர்கள் பலர் முன்வந்தனர்.இப்போது இப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடவிருக்கிறது.

இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் இணைய ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது.

இந்நிலையில்,இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜூன் மாதத்தில் என்ன தேதி? என்று சொல்லவில்லை.இதுகுறித்து விசாரித்தால் ஜூன் 20 ஆம் தேதி இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இதே ஜுன் 20 ஆம் தேதி, தனுஷ் நடிக்கும் குபேரா படமும் வெளியாகவிருக்கிறது.தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ்,நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படத்தில் ஜிம்சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்,ஒளிப்பதிவு நிகேத் பொம்மி,கலை இயக்கம் தோட்டா தரணி,ஆர்.கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘குபேரா’, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இப்படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இதேதேதியில் டி என் ஏ படமும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.இப்படம் மிக நன்றாக வந்திருப்பதாலேயே தனுஷ் படத்துடன் இப்படத்தை வெளியிடும் முடிவை படக்குழு எடுத்துள்ளது என்கிறார்கள்.இதன் காரணமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Related Posts