காலாவை வாழ்த்திய கோலிசோடா 2 – திரையுலகம் வியப்பு
ஜூன் 7 ஆம் தேதி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் வெளியானது.
ஜூன் 7 ஆம் தேதிக்கு அடுத்த திரைப்பட வெளியீட்டுத் தேதியான ஜூன் 14 அன்று, விஜய்மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோலிசோடா 2 படம் வெளியாகவிருக்கிறது.
ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் படம் வெளியானால் அடுத்த வாரம் வேறு படங்கள் வெளியாகாது என்கிற காலம் மலையேறிவிட்டது. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒரு வாரம் ஓடுவதே பெரிய விசயமாகிவிட்டது.
காலாவுக்கு அடுத்த வாரம் கோலிசோடா 2 வெளியாவதால், காலாவை காலி செய்ய கோலிசோடா 2 வருகிறது என்கிற பேச்சுகள் வரத் தொடங்கின.
ஆனால், அவற்றைப் பொய்யாக்கும் விதமாக, கோலிசோடா 2 குழுவினர் இன்று விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
இன்று (ஜூன் 9) நாளேடுகளில் வெளியான விளம்பரங்களில், தலைவர் படத்தைப் பார்த்துட்டோம் எங்களுக்குப் புடிச்சிருக்கு, வாழ்த்துகள் காலா என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு படத்தின் விளம்பரத்தில் அப்படத்தைப் பாராட்டுவதும் இதுவே முதல்முறை என்றும் சொல்கிறார்கள்.











