சினிமா செய்திகள்

ஜோதிகாவின் காற்றின் மொழி படப்பிடிப்பு தொடங்கியது

வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “தும்ஹாரி சுலு”. திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில் வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இந்தப் படத்தில் வித்யா பாலனின் கணவராக மானவ் கவுல் நடித்திருப்பார்.

நல்ல வரவேற்பினைப் பெற்ற இத்திரைப்படத்தை தமிழில் காற்றின் மொழி என்கிற பெயரில் எடுக்கிறார்கள்.ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வித்யாபாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். அவருடைய கணவராக நடிகர் விதார்த் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 4 ஆம் தேதி) தொடங்கியது.
தொடக்கவிழாவில், நடிகர் சிவகுமார், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கினார்கள்.

ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடுவார்களாம்.

Related Posts