மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்,லால், ரெஜிஷாவிஜயன், லட்சுமிபிரியா, ஜி.எம்.குமார் , யோகிபாபு உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். நேற்று (ஏப்ரல் 9) இப்படம் வெளியானது. இப்படத்துக்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழகமெங்கும் சுமார் ஐநூறு திரையரங்குகளில் இப்படம்
செய்திகள்
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா, லால், பொன்வண்ணன் உட்பட பலர் நடித்த படம் சுல்தான். ஏப்ரல் 2 ஆம் தேதி இப்படம் வெளியானது. தமிழகம் உச்சகட்டத் தேர்தல் பரபரப்பில் இருந்த நேரத்தில் இப்படம் வெளியானது. முதல்நாளே பல எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டது. எல்லாவற்றையும் தாண்டி படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துவருகிறதென திரையரங்கினர் சொல்லிக்கொண்டிருந்தனர். தேர்தல்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் கர்ணன் படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படம் நாளை திரைக்கு வரவிருக்கும் நேரத்தில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஏப்ரல் 10 முதல் 30 வரையிலான அக்கட்டுப்பாடுகளில் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்படவேண்டும் என்கிற கட்டுப்பாடும் உள்ளது. இதனால், கர்ணன்
புது இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை
இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், செயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ‘தலைவி’ திரைப்படம் ஏப்ரல்
எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சக்ரா’. பிப்ரவரி 19- ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தை விஷாலே தயாரித்து நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாதியில் நின்றிருக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் தொடங்குவார் என
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே பல தடைகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா பரவல், படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, காவல்துறை வழக்கு எனப் பல தடைகளைச் சந்தித்து இப்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியான
அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடித்திருக்கிறார், ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷிஅகர்வால் ஆகிய நாயகிகளும் விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். கொரோனா சிக்கலுக்கு முன்பு அதாவது 2020 பிப்ரவரியில் தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா சிக்கலில் படப்பிடிப்பு
இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (ஏப்ரல்1) மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் இதை அறிவித்திருக்கிறார். 2020 ஜூலை 17 ஆம் தேதி, இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இயக்குநர் பாரதிராஜாவின் 78 ஆவது பிறந்தநாள்.அதையொட்டி தமிழ்த்திரையுலைலிருந்து




















