சினிமா செய்திகள்

இரகசிய படப்பிடிப்பு – வரமுடியாது எனச் சீறிய நடிகை

கொரோனா ஊரடங்குக் காலத்தில் தொலைக்காட்சிகள்தாம் பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு.

தொலைக்காட்சிகளில் திரைப்படங்களைத் தாண்டி நெடுந்தொடர்களுக்கு வரவேற்பு இருந்துவருகிறது.

ஊரடங்கால் படப்பிடிப்புகளுக்குத் தடை இருக்கிறது.

இதனால், நெடுந்தொடர்களைப் புதிதாகப் படமாக்க முடியாத நிலை.

இதனால் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் தொடர்களின் நேயர்களை இழக்க வேண்டிய நிலை வரும்.

எனவே, சன், விஜய், ஜீ ஆகிய முன்னணி நிறுவனங்கள் சில முக்கிய தொடர்களின் படப்பிடிப்புகளை இரகசியமாக நடத்துகிறார்களாம்.

ஏதாவதொரு அரங்கம் அல்லது ரிசார்ட் எனப்படும் தங்கும் விடுதிகளில் குறைந்த பணியாளர்களுடன் படப்பிடிப்பு நடப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஜீ தொலைக்காட்சி நிறுவனம் வேறு மாநிலங்களுக்குப் போய்ப் படப்பிடிப்பு நடத்துகிறது என்கிறார்கள்.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரின் படப்பிடிப்பை இரகசியமாக நடத்தத் திட்டமிட்டு அதன் கதாநாயகி ரோஷிணியை படப்பிடிப்புக்கு அழைத்தார்களாம்.

கொரோனா பாதிப்பு இவ்வளவு கடுமையாக இருக்கிறது, எல்லோரும் பயத்தில் இருக்கிறார்கள், இந்த நிலையில் படப்பிடிப்பு நடத்தலாமா? கொஞ்சம்கூட மனசாட்சியில்லாமல் இப்படிச் செய்கிறீர்களே? என்று சீறிவிட்டாராம்.

அதோடு அரசாங்கம் படப்பிடிப்பு நடத்தலாம் என்று அறிவிக்கும்வரை நான் படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்றும் கறாராகச் சொல்லிவிட்டாராம்.

இந்த விசயமறிந்த தொழிலாளர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்களாம்.

தொலைக்காட்சிகள் இப்படிச் செய்யலாமா? என்கிற விமர்சனங்களும் வலுத்து வருகிறது என்கிறார்கள்.

Related Posts