கழற்றிவிட்ட கமல் – கடும் அதிருப்தியில் பிரபுதேவா
விஜய் மற்றும் விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள படம் விக்ரம்.
ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அறிமுக முன்னோட்டமும் வெளியிடப்பட்டது.
விக்ரம்’ படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இப்படத்தில், மலையாள நடிகர் ஃபகத் பாசிலை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அணுகினார்கள். ஆனால், பல்வேறு படங்களில் நடித்து வருவதால், தேதிகள் இல்லாமல் அவர் விலகிவிட்டார் என்று சொல்லப்பட்டது.
எனவே, அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபுதேவாவிடம் பேசினார்கள். அவரும் கமல் படம் என்பதால், தன்னுடைய இதர படங்கள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு, தேதிகள் கொடுத்தாராம்.
இதனால், ‘காதலா காதலா’ படத்துக்குப் பிறகு மீண்டும் கமல் – பிரபுதேவா இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது என்று சொன்னார்கள்.
இப்போது அதில் மாற்றம் நடந்துள்ளதாம்.
கொரோனா காரணமாக படப்பிடிப்பு தொடங்குவது தாமதமானதால், இந்தப்படத்தில் நடிக்க, ஃபகத்பாசில் தேதிகள் ஒத்துவந்ததாம்.
அதனால், விக்ரம் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.
அவர் ஒப்புக்கொண்டதால் பிரபுதேவாவைக் கழற்றி விட்டுவிட்டார்களாம்.
இதனால், விக்ரம் படக்குழு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் பிரபுதேவா.











