விக்ரம் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி கேட்ட சம்பளம் – கமல் அதிர்ச்சி
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள படம் விக்ரம்.கமல் நடிப்பில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அறிமுக முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இப்படத்தில், மலையாள நடிகர் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அவர் மட்டுமின்றி விஜய்சேதுபதியும் முக்கிய வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள்.இந்தப்படத்தின் கதையைக் கேட்ட விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
அதேசமயம், இந்தப்படத்தில் நடிக்க விஜய்சேதுபதி பதினைந்து கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார்.
அதைகேள்விப்பட்ட கமல்,இவ்வளவு சம்பளம் கேட்கிறாரா? என்று அதிர்ந்ததோடு இவ்வளவு சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைக்க வேண்டுமா? என்றும் யோசனை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இந்த வேடத்தில் விஜய்சேதுபதி நடித்தால் எவ்வளவு பலம் என்பதை எடுத்துச் சொல்லி கமலை சமாதானப்படுத்தியதோடு, விஜய்சேதுபதியை சமாளிக்கும் பொறுப்பை முழுமையாக நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி ஒப்புக்கொள்ள வைத்ததாராம்.
இதனால், விஜய்சேதுபதி கேட்ட சம்பளத்தைக் கொடுக்க கமல் ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்.












