அக்சய்குமார் படத்திலிருந்து லைகா நீக்கம்?
அக்ஷய் குமார் நடிக்கும் இந்திப்படம் “ராம்சேது” .
இரண்டு மாதங்களுக்கு முன் இதன் பூஜை உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்தது.
அக்ஷய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நேரில் பூஜையில் கலந்து கொண்டனர்.
அதன்பின் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கியது.
அபிஷேக் சர்மா இயக்கும் இந்தப் படத்தில் ஜாக்குலின், நசரத் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அக்ஷய்குமார் கொரோனா பாதிப்புக்கு ஆளானதால் படப்பிடிப்பு தடைபட்டது.
இப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பதாகச் சொல்லப்பட்டது.
ஆனால், படப்பிடிப்பு நடக்கிற நேரத்தில் லைகா நிறுவனம் செலவுக்காக கொடுத்த காசோலைகள் பணமில்லாமல் திரும்பிவிட்டனவாம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் லைகா நிறுவனத்தை தயாரிப்புப் பொறுப்பிலிருந்து விலகச் சொல்லிவிட்டார்களாம்.
இதற்காக முறைப்படி ஒப்பந்தம் போட்டு லைகாவை விலக்கும் வேலைகள் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
தமிழில் அந்நிறுவனம் பல சோதனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்நேரத்தில் இந்தியிலும் அந்நிறுவனத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
கோடி கோடியாகப் பணம் சம்பாதித்துக் கொடுக்க ஒருவர் இருந்தாலும் சரியான நிர்வாகிகள் இல்லாமல் அந்நிறுவனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.











