Uncategorized சினிமா செய்திகள்

சூரரைப்போற்று பட தாமதம் – சூர்யாவை பாஜக அரசு பழிவாங்குகிறதா?

சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ வெளியீடு தள்ளிப் போவதாக நடிகர் சூர்யா நேற்று (அக்டோபர் 22) அறிவித்தார். அது குறித்து நடிகர் சூர்யா ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில்,‘சூரரைப் போற்று’ திரைப்படம் விமானத் துறையை பற்றியது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயம் எனபதாலும், உண்மையான விமானப் படை விமானங்களையும் பயன்படுத்தியதாலும் நாங்கள் ஏராளமான அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது. இன்னும் சில அனுமதிகள் நிலுவையில் இருப்பதால், இது போன்ற தருணத்தில நாட்டின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு இப்படத்துக்கான காத்திருப்பு தவிர்க்க முடியாததாக ஆகிறது.

என்று கூறியிருந்தார்.

இந்த அறிக்கை வந்ததும் சூர்யாவை பாஜக அரசு பழிவாங்குகிறது என்பது உட்பட பல்வேறு யூகங்கள் பேசப்படுகின்றன.

ஆனால், உண்மை வேறாக இருக்கிறது.

இவ்வாண்டு தொடக்கத்தில், கரஞோகர் தயாரிப்பில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாக நடித்த குஞ்சன்சக்சேனா என்கிற இந்திப்படம் தொடங்கப்பட்டது.

அப்படம் முதல் இந்திய பெண்விமானியின் வாழ்க்கைக்கதையை அடிப்படையாகக் கொண்டது.

இப்படம் கொரோனா சிக்கல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால்,ஆகஸ்டு 12 ஆம் தேதி நேரடியாக இணையத்தில் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளீயிட்டது.

அந்தப் படம் வெளியான பின்பு, இந்திய விமானப் படையைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாம். இந்திய விமான அமைச்சகமும் இதுகுறித்து கண்டனம் தெரிவித்ததாம்.

இதனாலேயே சூரரைப் போற்று படத்துக்கு புதுசிக்கல் வந்துள்ளதாம்.இப்படத்தில் சூர்யா,இந்திய விமானப்படை வீரராக நடிக்கிறார்.

அதனால், பட வெளியீட்ட்ற்கு முன்பே இந்திய விமானப்படையிடம் தடையில்லாச் சான்று வாங்க வேண்டும் என்று அமேசான் நிறுவனம் கூறிவிட்டதாம்.

ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் இச்சிக்கல் உருவானது. கொரோனா காலமென்பதால் நினைத்தபடி விமானப்படையின் தடையில்லாச் சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் பட வெளீயீடு தள்ளிப்போயிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts