September 22, 2026
சினிமா செய்திகள்

ஏப்ரல் 13 ரிலீஸ் உறுதி – தடையை மீறும் மெர்க்குரி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மெர்க்குரி படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வசனங்களே இல்லாத இந்தப் படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. பின்னணி இசையின் மூலமே நகரும் இந்தப் படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்தாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்திரையுலகில் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், திட்டமிட்டபடி படம் வெளியாகாது என்று சொல்லப்பட்டது.

ஆனால் படத்தைத் திட்டமிட்டபடி ஏப்ரல் 13 ஆம் நாள் வெளியிட படத்தைத் தயாரித்திருக்கும் பென் மூவிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

இப்படத்தில் வசனங்களே இல்லை என்பதால் இதைத் தமிழ்ப்படம் என்று மட்டுமே சொல்லமுடியாது என்கிற காரணத்தைச் சொல்லி படத்தை வெளியிடவிருக்கிறார்கள்.

அதை உறுதி செய்யும் விதமாக, படத்தின் டிரெயிலரை இன்று வெளியிடவிருக்கிறார்கள்.

படங்கள் மட்டுமின்றி படநிகழ்ச்சிகள் டிரைலர்,டீசர் ஆகிய எதையுமே செய்யக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்திருக்கிறது. அதை மீறி டிரெயிலர் வெளியாவதால் படமும் ஏப்ரல் 13 அன்று வெளியாவது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

Related Posts