டிசம்பர் 20 ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி, டிசம்பர் 21 ஆம் தேதி, தனுஷின் மாரி 2,சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டிசிங்கம், விஷால் வெளியிட்ட கன்னடப்படம் கேஜிஎஃப் ஆகியனவற்றோடு கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான
சினிமா
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்திருக்கிறது. மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இலண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதுவரை இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தற்போதுவரை ‘சூர்யா37’ என்றே
விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் உலகறிந்த செய்தி. அதுவும் சமூக வலைதளங்கள் பெருகிய பிறகு மோதலும் அதிகமாகிவிட்டது. நேற்று திடீரென தேவாங்கு அஜீத், ஆமை விஜய் ஆகிய ஹேஷ்டேக் ட்விட்டர் வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது. விஜய் ரசிகர்கள் அஜீத்தை தேவாங்கு என்று சொல்லியும் அஜீத் ரசிகர்கள் விஜய்யை ஆமை என்று சொல்லியும் டிரெண்ட் செய்தார்கள். இதைப்பார்த்த நடிகை கஸ்தூரி, அடப்பாவிகளா
இயக்குநர் டி.ராஜேந்தர் டிசம்பர் 24 அன்று சென்னை காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, “என் மகன் சிம்பு கதை, திரைக்கதை எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்த படம் ‘மன்மதன்’. அப்படத்தை இந்தி மற்றும் வட மாநில மொழிகளில் வெளியிடவும் உரிமை பெற்றுள்ளோம். இந்தி உள்ளிட்ட வட மாநில மொழிகளுக்கான டப்பிங்
சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம், எம்,ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவை மட்டுமின்றி இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றின் படப்பிடிப்பு அடுத்தடுத்து
பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி உட்பட பலர் நடித்திருக்கும் படம் மாரி 2. இப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் விஜய்சேதுபதி நடித்த சீதக்காதியும், மாரி 2 வெளியான அதேநாளில் ஜெயம்ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் விஷால் வெளியிட்ட கேஜிஎஃப் ஆகிய படங்கள் வெளியாகின. கடும்போட்டி இருந்த
நடிகர் ரஜினிகாந்த் தொலைக்காட்சி தொடங்கப்போவதாகச் செய்திகள் வந்தன.அவற்றை உறுதிப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஓய்வுக்காக டிசம்பர் 22 இரவு குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது…. பிறக்கப்போகும் 2019 புத்தாண்டு மக்கள் அனைவரும் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய மூன்று படங்களில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். மூன்றுமே வெற்றிப்படங்கள் என்று சொல்லப்படுவதால் இந்தக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. இவர்களின் வடசென்னை படத்தைத் தொடர்ந்து, தற்போது இந்தக் கூட்டணியின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள
தினேஷ்செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள துப்பாக்கிமுனை படம் டிசம்பர் 14 அன்று வெளியானது. தமிழகமெங்கும் சுமார் 450 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்று அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியிருந்தார். இப்படம் வெளியானதும் நல்ல விமர்சனங்களை மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்றதாம். வெள்ளி,சனி,ஞாயிறு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய இந்தப்படம் வார நாட்களில்
சத்யராஜ் இப்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார். படம் மற்றும் அதில் நடிக்க வேண்டிய நாட்கள் ஆகியனவற்றைக் கணக்கிட்டு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாராம். இப்போது அதிரடியாகத் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். பெரிய கதாநாயகர்கள் பெரிய இயக்குநர்கள் படங்கள் ஆகியனவற்றைத் தவிர புதிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள்























