சினிமா செய்திகள்

பிடிவாத பேட்ட பின்வாங்கிய விஸ்வாசம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலையொட்டி நாளை (சனவரி 10,2019) திரைக்கு வருகிறது.

இதே நாளில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 1090 திரையரங்குகளை இரு படங்களும் பகிர்வதால் வசூல் பாதிக்கும் என்றும் எனவே ஏதேனும் ஒரு படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்கும்படியும் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் வற்புறுத்தப்பட்டது.

இரண்டு படங்களும் இதே தேதியில்தான் வெளியாகும் என்று பிடிவாதமாக இருந்துவிட்டனர்.

இதே தேதியில் ஆந்திராவில் பேட்ட படத்துக்கு போதிய திரையரங்குகள் ஒதுக்குவதில் இழுபறி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

பேட்ட வெளியாகும் 10 ஆம் தேதி பாலகிருஷ்ணா நடிக்கும் என்.டி.ஆர், ராம்சரண் நடிக்கும் வினய விதேய ராமா ஆகிய இரண்டு பெரிய படங்கள் திரைக்கு வருகின்றன.

சுமார் 90 சதவீதத்துக்கு அதிகமான திரையரங்குகள் அந்தப் படங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனவாம்.

இதனால், பேட்ட படத்தை வருகிற 26 ஆம் தேதி தெலுங்கில் வெளியிடும்படி பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால் ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதில் பட நிறுவனம் உறுதியாக இருந்து விட்டது.

இதனால் தெலுங்கில் குறைவான திரையரங்குகளில் பேட்ட படம் வெளியாகிறது. தமிழகத்தில் பிடிவாதமாக இருந்த விஸ்வாசம் படக்குழு ஆந்திராவில் பின்வாங்கிக்கொண்டது.

அங்கு விஸ்வாசம் படத்தை சனவரி 26 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts