2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா படத்தில், மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள்.அதேநேரம் அம்மக்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது?
தேனி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் தனுஷ்,தொழில் நிமித்தமாக பாங்காங்க் செல்கிறார்.போன இடத்தில் நல்ல வேலை,பணக்கார முதலாளி சத்யராஜின் மகள் ஷாலினிபாண்டேவுடன் திருமண வாய்ப்பு என அடுத்தடுத்து ஏறுமுகத்தில் இருக்கிறார்.அந்த நேரத்தில் ஏற்படும் முக்கிய நிகழ்வு காரணமாக சொந்த ஊர் திரும்பும் நாயகன் அங்கேயே தங்க முடிவெடுக்கிறார்.அதற்கு பல இடையூறுகள்.அவை என்ன? அவற்றின்
அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும்’ வீர தமிழச்சி’ திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா,சுஷ்மிதா சுரேஷ்,ஸ்வேதா டோரத்தி,மறைந்த நடிகர் மாரிமுத்து,எழுத்தாளரும்நடிகருமான வேல ராமமூர்த்தி, கே.ராஜன்,மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூபின்
சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான
இயக்குநர் வெங்கட்ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படத்தில் ரஞ்சித், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சூரியகாந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். வடிவேல் – விமல் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை
தற்கால உலகில் ஒரு விவசாயியுடைய வாழ்வினை மையமாக வைத்து,அழுத்தமான திரைக்கதையில் அனைத்துதரப்பினரும் இரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக மருதம் உருவாகியுள்ளது. இயக்குநர்கள் சரவண சுப்பையா,மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணிபுரிந்தவரும்,அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவரும்,தற்பொது SRM கல்லூரியில் உதவிப்பேராசியராகப் பணியாற்றுபவருமான கஜேந்திரன் இப்படம் மூலம் இயக்குநராக
லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு படங்கள் தொடர்ந்து வெற்றி என்றதும் அப்படங்களின் நாயகனுக்குப் பெரும் வரவேற்பு.அதன்பின் அவர் படங்கள் வெளியாகும் போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. டாடா படத்துக்கு அடுத்து வெளியான ஸ்டார் படம் நன்றாகப் போனது.ஆனால் அதற்கடுத்து வெளியான ப்ளடி பெக்கர் மற்றும் அண்மையில் வெளியான கிஸ் ஆகிய படங்கள் சரியாகப் போகவில்லை. இதனால், கவினும் அவருடைய இரசிகர்களும்
இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இரவின் விழிகள்.இந்தப்படத்தில் தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள்
கபடி விளையாட்டு அதில் முன்னணி வீரர்களாக இருக்கும் இரண்டு நண்பர்கள், மூன்று அணிகள், அவற்றின் பின்னால் இருக்கும் பெரும்புள்ளிகள் ஆகியோரை வைத்துக் கொண்டு வன்முறை ஒவ்வொருவர் வாழ்விலும் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம் பல்டி. நாயகன் ஷேன்நிகமும் சாந்தனுவும் பஞ்சமி எனும் கபடிக்குழுவில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பொற்றாமரை
ஒரு காவல்நிலையத்தை மையமாக வைத்து பல திடுக்கிடும் திருப்பங்களைச் சொல்லி கவனம் ஈர்த்திருக்கும் படம் ரைட். காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கிறார் நட்டி.அவர், பிரதமர் பாதுகாப்பிற்காகச் சென்ற நிலையில் அவரது காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில்























