சூரியகிரகண ஆராய்ச்சியில் ஈடுபடும் கதாநாயகன்,அதனால் ஏற்படும் விளைவு காரணமாக ஓர் அதிசய திறனை அடைகிறார்.அதன்படி பிறருக்கு நடக்கவிருக்கும் கெட்ட விசயங்கள் அவருக்கு முன்கூட்டியே தெரியவருகிறது.இந்நிலையில் அவருடைய காதலி இதுபோன்றதொரு சிக்கலில் மாட்டுகிறார்.காதலியைக் காப்பாற்றப் போராடுகிறார்.காதலிக்கு
இயக்குநர் முத்தையா இப்போது இரண்டு படங்களை முடித்து வைத்திருக்கிறார்.அருள்நிதி நடிப்பில் அவர் இயக்கியிருக்கும் படமும் அவர் மகனை கதாநாயகனாக வைத்தே அவர் இயக்கியிருக்கும் சுள்ளான்சேது என்கிற படமும் தயாராக இருக்கிறது. இவற்றில் அருள்நிதி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.அந்நிறுவனம் இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியிலும் இணையதளத்திலும் ஒளிபரப்பத்
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் படம் ஆதி கதாநாயகனாக நடித்த படம் சப்தம்.‘ஈரம்’வெற்றிக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா,எம்.எஸ்பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர்
விஜய், ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் குஷி.ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த அந்தப்படம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார். அதற்காக,செப்டம்பர் 20 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில்,தயாரிப்பாளர்
ஜில்லா புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார், இயக்குநராக அறிமுகமாகும் படம் ரைட். பரபரப்பான சம்பவங்களை கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார். தமிழ்தித்ரையுலகில் கால்பதித்திருக்கும் RTS Film Factory நிறுவனத்தின் முதல்தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன்,
ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கும் படம் பல்டி.சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம்
காதலே பிடிக்காத நாயகனுக்குக் காதல் வந்தால் என்ன ஆகும்? என்கிற கதையை வைத்து நிறையப் படங்கள் வந்துவிட்டன.இந்தப்படத்திலும் நாயகன் அப்படித்தான் என்பதோடு கூடுதலாக அவருக்கு ஒரு அளப்பரிய ஆற்றல் இருக்கிறதென்றும் அதனால் பல நிகழ்வுகள் நடக்கிறதென்றும் சேர்த்துக் கொடுத்து சுவை கூட்ட முயன்றிருக்கும் படம் கிஸ். நாயகன் கவின் முன்னால் இணையர் எவராவது முத்தமிட்டுக் கொண்டால்,அவர்களுக்கு
காசு வாங்கினாலும் காரியத்த கச்சிதமா முடிச்சுக் கொடுத்துடுவாரு என்கிற சொல்லில் உள்ள அவலத்தை யாரும் உணர்வதே இல்லை. ஒரு செயலுக்குக் கையூட்டு வாங்குவதையும் கொடுப்பதையும் நியாயப்படுத்துகிற சொல் அது.அதை உணராமல் விதந்தோதுபவர்களை வைத்தே அந்த அவலத்தை அம்பலமேற்ற முயன்றிருக்கும் படம் சக்தித் திருமகன். தமிழ்நாட்டில் அரசியல் தரகராக இருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி.பணமிருந்தால் எல்லா
இராமாயணத்தில் இடம்பெற்றது தண்டகாரண்யம்.தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடு என்பதே அதன்பொருள்.இந்தப் பெயரை வைத்துக் கொண்டு உண்மையான தண்டனைக்குரியவர்கள் யார்? என்பதைப் பொட்டிலடித்தாற்போல் சொல்லியிருக்கிறது படம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த நாயகன் தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா, அம்மா ஆகியோரோடு வசித்து வருகிறார். கலையரசன்
வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் என்றால் ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்வதுதான்.அப்படிப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவரின் வாழ்க்கை வரலாறு,அவரைப் பற்றி இதுவரை மக்கள் கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாவற்றையும் சுக்குநூறாக உடைப்பதென்பது அரிய நிகழ்வு. அந்த நிகழ்வை நிகழ்த்திக் காட்டியிருக்கும் படம் படையாண்ட மாவீரா. பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உட்பட























