Home Articles posted by cadmin (Page 373)
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதிக்கு இராஜபக்சே மகன் புகழாரம் – உலகத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு

இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னணி வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர். முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளான இராஜபக்சே சகோதரர்களுக்கு
சினிமா செய்திகள்

டிக்டிக்டிக் படத்தில் என்ன ஆபாசத்தைக் கண்டீர்? – சந்தோஷை வெளுத்த தங்கசாமி

ஆபாச இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கடும் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதில் சொன்ன ஆபாச இயக்குநர், பாரதிராஜாவின் டிக்டிக்டிக் படம் குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதையொட்டி,ராட்டினம், எட்டுத் திக்கும் மதயானை ஆகிய படங்களின் இயக்குநர் வெளியிட்டுள்ள பதிவு….. நேற்று மதியம் என் மொபைலில் ஒரு பத்திரிகையில்
சினிமா செய்திகள்

நடிகர் சூரியிடம் பணமோசடி செய்ததாக விஷ்ணுவிஷால் அப்பா மீது வழக்கு – விஷ்ணுவிஷால் விளக்கம்

நடிகர் விஷ்ணு விஷாலுடன் வீர தீர சூரன் என்ற படத்தில் நடிகர் சூரி நடித்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னுடைய தந்தையான அப்போதைய டிஜிபி ரமேஷ் குடவாலாவை சூரிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் விஷ்ணு விஷால். இதனிடையே நிலம் வாங்க விரும்பிய சூரிக்கு, சிறுசேரியில் உள்ள நிலத்தை வாங்கித் தருவதாக கூறிய ரமேஷ் குடவாலா, இதற்காக சூரியிடம் 3 கோடியே 10 இலட்ச
சினிமா செய்திகள்

பணம் ஈழத் தமிழரின் இரத்தத்தைவிட வலியதா விஜயசேதுபதி?

இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னணி வீரராக இருந்து ஓய்வு பெற்றவர் முத்தையா முரளிதரன். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர். முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளான இராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்தவர். அதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான
சினிமா செய்திகள்

இரண்டாம்குத்து படத்துக்கு பாரதிராஜா எதிர்ப்பு – உடனடி விளைவு என்ன?

சந்தோஷ் பி.ஜெயக்குமார்  இயக்கி நாயகனாகவும் நடித்துள்ள படம் இரண்டாம் குத்து. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம்பாகம் இது. இப்படத்தின் முதல்பார்வை மற்றும் குறுமுன்னோட்டம் ஆகியன அணமையில் வெளியிடப்பட்டது. அவை வெளியானதிலிருந்து அப்படக்குழுவினருக்குக் கடும் எதிர்ப்புகள். இவ்வளவு மோசமாக படம் எடுப்பதா? என்று பலதரப்பிலிருந்தும்
செய்திக் குறிப்புகள்

இவ்வளவு கேவலமாகவா நடந்துகொள்வீர்கள்? – பாரதிராஜா கடுங்கோபம்

இயக்குநர் பாரதிராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….. உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவின் வணக்கம். சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது. உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ
சினிமா செய்திகள்

கபெரணசிங்கம் படம் திருட்டு – இயக்குநர் வேதனை

அக்டோபர் இரண்டு முதல் வெளியாகி இருக்கும் திரைப்படம் க/பெ ரணசிங்கம். விஜய்சேதுபதி ஜஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலரது நடிப்பில் சண்முகம் முத்துசாமி திரைக்கதை வசனத்தில் பெ விருமாண்டி இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் இந்தப்படம் இதுவரைக்கும் சொல்லப்படாத ஒரு கதையை மக்களின் பிரச்சினையை மிகத்தீவிரமாகப் பேசுவதால் சினிமா ரசிகர்களின் குறிப்பாக பெண்களின் பத்திரிகையாளர்களின் பாராட்டுகளைப்
சினிமா செய்திகள்

ரஜினியே ஒப்புக்கொண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு இரத்தானது ஏன்? – புதிய தகவல்கள்

ரஜினியின் 168 ஆவது படமாகத் தயாராகிக் கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.இந்தப்படத்துக்கு டி.இமான்
விமர்சனம்

வர்மா – திரைப்பட விமர்சனம்

அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு ஒரிஜினலின் ரீமேக். விக்ரம் மகன் துருவ் அறிமுகம், பாலா இயக்கம் என்றெல்லாம் எதிர்பார்ப்புடன் இருந்து ட்ரெய்லர் ரிலீசிலே கொஞ்சம் ஏமாற்றம் தந்தது. படம் வரவேயில்லை. இந்திய சினிமா சரித்திரத்தில் படம் நன்றாக இல்லையென்று தயாரிப்பாளரே சொல்லி ரிலீசாகாமல் செய்ததெல்லாம் வரலாறு. பின்பு ஒரிஜினலில் இணை இயக்குநராய் பணி புரிந்த ஒருவரால் ஆதித்ய வர்மாவாக வந்தது.
சினிமா செய்திகள்

முழுமையாக முடிவடைந்தது விஜய்சேதுபதி படம்

பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் அனபெல்சுப்பிரமணியம். விஜய் சேதுபதி,டாப்சி, ராதிகா, யோகி பாபு, மதுமிதா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்று வந்தது.