சினிமா செய்திகள்

முழுமையாக முடிவடைந்தது விஜய்சேதுபதி படம்

பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் அனபெல்சுப்பிரமணியம்.

விஜய் சேதுபதி,டாப்சி, ராதிகா, யோகி பாபு, மதுமிதா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்று வந்தது.

படக்குழுவினர் அனைவருமே அங்கேயே தங்கவைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கியது.செப்டெம்பர் 13 வாக்கில் விஜய்சேதுபதி படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

36 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்து விட்டது.படக்குழுவினர் எதிர்பார்த்தபடி அங்கு முருகன் கோயில் இல்லாததால் அதை மட்டும் தென்னிந்தியாவில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.

படத்தைத் தொகுத்துப் பார்த்தபின் இன்னும் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

கொரோனா சிக்கல் முடிவடைந்த பின் விஜய்சேதுபதி போன்ற பெரிய நடிகரின் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்திருப்பது திரைத்துறையினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.

Related Posts