‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. நிகழ்வில் தயாரிப்பாளர் துரைசாமி பேசும்போது, ஒரு படம் தயாரித்தால் அது நல்ல திரைப்படமாகத் தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குநரிடம் விட்டு
‘ஏ 1’ பட இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது, தயாரிப்பாளர் குமாருக்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம்.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி.கே.கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்தப் படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ் மேனன், இரண்டாவது தொகுப்பை விஜய், மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு, நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர். முதல்முறையாக 4 இயக்குநர்கள் 4 கதைகளை
அஜித், விக்ரம் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கியவர்களும், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப்படங்களை இயக்குபவர்களுமான ஜேடி – ஜெர்ரி ஆகியோர் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்தப்படத்தில் புதுமுக நடிகை கீதிகா திவாரி என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார்,
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ரெஜினா நந்திதா உட்பட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப்படம் சில காரணங்களால் வெளியிடத் தாமதமானது. இப்போது அந்தப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயிண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இன்று காலை 10.15 மணிக்கு அந்நிறுவனம் வெளீயிட்டுள்ள அறிவிப்பில், இப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்று
ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள். இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது… மிக
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இதற்கடுத்து அஜீத் நடிக்கவிருக்கும் படம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் அஜீத் நடிக்கும் அடுத்த படத்தைத் தயாரிக்கும் நிறுவனம்
ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள். இவருக்கு அவரும் அவருக்கு இவரும் திருமணத்திற்குப் பெண் பார்க்கிறேன் என்று போகிறார்கள். அதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் களத்தில் சந்திப்போம். வாய்ப்பேச்சில் வல்லவராக ஜீவா அதிரடி ஆளாக அருள்நிதி என்று இருவருக்கும் தனித்தனி பாதை போட்டுவிட்டார்கள்.
சந்தானம் நடிப்பில் கே.ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஏஒன். இப்படம் சந்தானம் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்து உருவாகியிருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ்.இந்தப்படத்தில் கானா பாடகராக நடிக்கிறார் சந்தானம். அதனால் இசைக்குப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கொரோனாவுக்கு
ஒரு காடு அதற்குள் சுற்றுலா செல்லும் நண்பர்கள் கூட்டம். அங்கு அவர்களுக்குப் பல ஆபத்துகள் மற்றும் மர்ம மரணங்கள்.அவை ஏன்? எதற்கு? எப்படி? இவற்றிற்கு விடை சொல்லும் படங்கள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வந்திருக்கும் படம் தான் ட்ரிப். முழுதும் திகில் மர்மம் என்று போகும் படங்களுக்கு மத்தியில் நகைச்சுவை கலந்து அணுகியிருப்பதுதான் இப்படத்தின் மாறுபாடு.





















