January 14, 2025
சினிமா செய்திகள்

செல்வராகவன் எஸ்.ஜே.சூர்யா பட வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ரெஜினா நந்திதா உட்பட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப்படம் சில காரணங்களால் வெளியிடத் தாமதமானது.

இப்போது அந்தப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயிண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இன்று காலை 10.15 மணிக்கு அந்நிறுவனம் வெளீயிட்டுள்ள அறிவிப்பில், இப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

செல்வராகவன் இயக்கம் யுவன்ஷ்ங்கர்ராஜா இசை எஸ்.ஜே.சூர்யா நடிப்பு ஆகியனவற்றால் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருந்த இந்தப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் இரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts