இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ராணா டக்குபட்டி ஆகியோர் தயாரிப்பில், ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு
சிவகார்த்திகேயனின் 26 ஆவது படம் சேயோன். தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.அதில்,இப்படம் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலேயே வெளியாகும் என்று
கடவுள் நம்பிக்கை போல் சாத்தான் நம்பிக்கையும் மக்களிடம் இருந்திருக்கிறது.அவர்கள் சாத்தானுக்கு மனித உயிர்களைப் பலி கொடுக்கும் அளவுக்குத் துணிந்தவர்கள்.அம்மக்கள் வசிக்கும் கிராமத்தில் பல்லாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல மர்ம மரணங்கள் நடக்கின்றன.அவற்றை விசாரிக்க காவல்துறை வருகிறது.அவர்களுடைய விசாரணையில் பல உண்மைகள் வெளியாகின்றன.இன்னொரு பக்கம் கதாநாயகனும் இந்த விசாரணைக்குள்
காதல் பிடிக்காத இளைஞரும் காதல் பிடிக்காத யுவதியும் தங்களுடைய வேறு தேவைக்காக காதலர்களாக நடிக்கிறார்கள்.அந்தக் காதலின் நிலை என்ன? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கும் படம் நீ ஃபார் எவர். கதாநாயகனாக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த் ஓங்குதாங்காக இருந்தாலும் அன்பான காதலன் வேடத்துக்குச் சரியாகப் பொருந்தியிருக்கிறார்.நடிப்பு,நடனம்,அப்பாவித்தனம் ஆகிய அனைத்தையும் சரியாகச்
இணையத்தொடரின் தொடக்கத்திலேயே விஜய்சேதுபதியின் தலை மட்டும் ஓரிடத்தில் கிடைக்கிறது.அவருடைய உடல் எங்கே? என்கிற காவல்துறையின் தேடலில் விரிகிறது தொடர். முத்து என்கிற அலியாஸ் காட்டான் எனும் வேடத்தை ஏற்றிருக்கிறார் விஜய்சேதுபதி.தொடரின் தலைப்பில் மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தொடரையும் தன் தலையில் தாங்கியிருக்கிறார்.கடிகாரம் பழுது நீக்கும் கடைப் பணியாளர், யானைப் பாகன், ஆதரவற்றோர்
பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகியும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகனும் காதலித்தால்,தகுதியைக் காரணம் சொல்லி பெண்வீட்டார் அந்தக் காதலை ஏற்கமாட்டார்கள்.இந்தப்படத்தில் தகுதியைத் தாண்டி உருவகேலி எனும் சிக்கலை முன்னிலைப்படுத்தி காதல் திருமணத்துக்குத் தடை வருகிறது.அதை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் கதை. தன்னைவிட தன் மகன் ஜீ.வி.பிரகாஷ் அழகாக இருப்பதால்
சமுத்திரக்கனி,கௌதம் வாசுதேவ் மேனன்,லட்சுமி பிரியா சந்திரமௌலி,அபிநயா,கார்த்திக் குமார்,படவா கோபி,மதுமிதா,அர்ஜுனன், ஹரிதா பராகோட்,கோதண்டம்,கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கார்மேனி செல்வம்.ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.
தேசியவிருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி.அஜித்குமார் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத்தொடரில் விஜய்சேதுபதி,மிலிந்த் சோமன், சுதேவ்நாயர்,முத்துக்குமார்,சிங்கம்புலி,கலைவாணி பாஸ்கர்,வி ஜே பார்வதி,ரிஷா ஜேக்கப்,வடிவேல் முருகன்,அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தணிக்கை வாரியம் சிக்கல் காரணமாக வெளியாகவில்லை. அதனால், அந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் போனதும் அங்கு தீர்வு கிடைக்காததால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் தணிக்கை வாரியத்தை அணுகியதும் அனைவரும் அறிந்த செய்தி. இப்போது, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டுக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு மேலும் சில
ஸ்வீட் ஹார்ட், ஜோ,ஆண் பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப் படங்கள் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் ரியோ ராஜ்.அவர் கதாநாயகனாக நடிக்கும் புதியபடம் மேடி. இறுகப்பற்று, சொர்க்கவாசல் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். இப்படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ்,சிங்கம்புலி,மிர்ச்சி விஜய்,கார்த்திகா உள்ளிட்ட பலர்























