சினிமா செய்திகள்

நள்ளிரவில் பனிமலர் மருத்துவமனை ஐசியூவில் சேர்க்கப்பட்ட சாண்ட்ரா – பிக்பாஸ் கொடூரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.அந்நிகழ்ச்சி ஒன்பது ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.ஏழு ஆண்டுகள் கமல்ஹாசனும் அடுத்து விஜய்சேதுபதியும் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாண்டு, வி.ஜே.பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது.

இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.

பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர்.

இந்த ஆண்டு போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி சுவாரசியம் இல்லாமல் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அதனால் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோரை நிகழ்ச்சிக்குள் சேர்த்தனர்.

இவர்களில், பிரஜின், அமித் பார்கவ் ஆகிய இருவரும் வெளியில் வந்து விட்டனர்.

89 நாட்களைக் கடந்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த ஆண்டு நிகழ்ச்சி,தொடக்கத்தில் இருந்தே பலவிதமான விமர்சனங்களைச் சந்தித்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு போட்டியாளர்களின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது வீட்டில் மொத்தமாக 9 போட்டியாளர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே என்கிற டாஸ்க் நடந்து வருகிறது. இதில் போட்டியாளர்கள் மும்முரமாக விளையாடி வரும் நிலையில், நேற்றைய தினம் கார் டாஸ்க் நடைபெற்றது.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் காரில் உட்கார்ந்து இருக்கும் நிலையில், கடைசி வரை உள்ளயே இருப்பவர்களுக்கு அதிகமான புள்ளிகள் வழங்கப்படும். அப்போது சாண்ட்ரா பக்கத்தில் இருந்த பார்வதி, கம்ருதீன் ஆகிய இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சாண்ட்ராவிடம் வம்பிழுப்பதைப் போன்று பேசிக் கொண்டே இருந்தனர். அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் நடந்து கொண்டே இருக்க, ஒருக்கட்டத்தில் வரம்பு மீறி சாண்ட்ராவை தனிப்பட்ட முறையில் பார்வதி, கம்ரூதின் இருவரும் விமர்சித்தனர்.
அதோடு அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து கீழே தள்ளினார்கள். குறிப்பாக சாண்ட்ராவை காலால் பார்வதி எட்டி உதைக்க, அதற்கு கம்ருதீன் உதவி செய்கிறார்.கீழே விழுந்த சாண்ட்ரா மயக்கம் அடைய, டாஸ்க்கில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என சபரி, வினோத ஆகிய இருவரும் காரில் இருந்து இறங்கி விட்டனர். அதனைத் தொடர்ந்து சாண்ட்ராவை தூக்கிக் கொண்டு மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.அப்போது கம்ரூதின், பார்வதி இருவரும் சாண்ட்ரா நடிப்பதாகப் பேசினார்கள்.

இந்தக் காட்சிகள்,சமூகவலைதளங்களில் தீயாய்ப் பரவியது. இதனையடுத்து பார்வதி, கம்ருதீன் ஆகிய இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டுமென்றும், அவர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் விட்டு வைத்திருக்கக் கூடாது என்றும் எதிர்ப்புக் குரல்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இன்று விஜய் சேதுபதி போட்டியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.அப்போது விஜய் சேதுபதி,நம்மகிட்டதான் வாய் இருக்கே. என்ன வேணாலும் பேசிக்கலாம். அதுக்கப்புறம் பேசி சமாளிச்சுடலாம். பண்ண தப்பை நியாயப்படுத்திக்கலாம் என்று நினைக்கிற எண்ணம் இருக்கு பாருங்க. யாருக்கு இது நடந்தாலும் சரி, எந்த இடத்துல நடந்தாலும் சரி பொறுத்துக்க முடியாது. நான் பொறுத்துக்கவும் மாட்டேன் எனவும்,கம்ருதீனுக்கு பலமுறை சொல்லி இருக்கேன். இப்படி பலமுறை பேசுறீங்களே. அது பார்க்குறவங்களுக்கு கஷ்டமா இருக்காதா? உங்க அக்கா இதைப் பார்த்து தம்பி நல்லா பண்ணினப்பான்னு சொல்வாங்களா. பாரு வீட்டுக்குப் போனதும் பாராட்டு விழா தான் எடுப்பாங்க. ஒரு பொண்ணை எட்டி உதைச்சு தள்ளுன உன் கோவத்தை இரசிச்சேன்னு பாராட்டுவாங்க. உங்க அம்மா, அக்கா பாராட்டுவாங்க. ரொம்ப சந்தோசம். நீங்க ரெண்டு பேரும் என சொல்லி விட்டு ரெட் கார்டை எடுத்து நீட்டுகிறார் விஜய் சேதுபதி.

இது இன்றும் நாளையும் ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்நிலையில், உள்ளே நடந்துள்ள ஒரு கொடூரம் வெளியே கசிந்துள்ளது.

அது என்ன?

காரிலிருந்து எட்டி உதைத்து கீழே தள்ளப்பட்ட சாண்ட்ராவை மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்தது வரை காட்டினார்கள்.ஆனால், அதனால் உண்மையாகவே கடும் பாதிப்பு ஏற்பட்டு, நள்ளிரவு இரண்டரை மணியளவில் பிக்பாஸ் அரங்கிலிருந்து பனிமலர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருக்கிறார்கள்.அவர் வீட்டுக்குத் தகவலே சொல்லவில்லை. சில மணிநேர சிகிச்சைக்குப் பிறகு அவர் கண்விழித்திருக்கிறார்.

கண் விழித்ததும் இங்கிருந்து இப்படியே நான் வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லி அழுதிருக்கிறார்.அவரை வலுக்கட்டாயமாகச் சமாதானம் செய்து மீண்டும் அந்த வீட்டுக்குள் கூட்டிப் போயிருக்கிறார்கள்.

இந்தத் தகவல் வெளியே கசிந்து சாண்ட்ரா வீட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்று சொல்லிவிட்டு இப்போது வரம்பு மீறிய காட்சிகள் மற்றும் வசனங்களுடன் போய்க்கொண்டிருக்கும் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பியை அதிகரிப்பதற்காக உயிர்ப்பலி ஏற்படுத்தவும் துணிந்திருக்கிறார்கள் என்பது சாண்ட்ராவுக்கு நிகழ்ந்த கொடுமை மூலம் அறிய முடிகிறது.

இனியும் இந்நிகழ்ச்சியைத் தொடர அனுமதிக்கக்கூடாது.இதைச் செயலாக்க சமுதாய ஆர்வலர்கள் மற்றும் அரசாங்கம் ஆகியன முன்வரவேண்டும்.

– அரசன்

Related Posts