பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா – மீண்டும் காதல் சர்ச்சை

முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி ஆரவ் ஓவியா காதல்.
காதல் என்றும் நட்பு என்றும் பல்வேறு வகையில் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் எல்லாம் ஓய்ந்து அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர்.
இருந்தாலும் அவர்களுக்குள் காதல் இருக்கிறது அதை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இன்று ஆரவ்விற்கு பிறந்தநாள். அதற்காக நேற்று நள்ளிரவில் நெருங்கிய நண்பர்களுடன் அவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
மிகச்சிலர் மட்டுமே கலந்துகொண்ட அந்தக் கொண்டாட்டத்தில் ஓவியாவும் இருக்கிறார்.
அதனால் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் இந்தக் கொண்டாட்டம் அமைந்திருக்கிறதென சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.