ரஜினி கமலை தொடர்ந்து பவன்கல்யாண் – லைகா அதிரடி
ரஜினி நடிக்கும் 2ஓ, கமல் நடிக்கும் இந்தியன்2 உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துக கொண்டிருக்கிறது லைகா நிறுவனம்.
நேரடித் தயாரிப்பு மட்டுமின்றி பிற நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களையும் வாங்கி வெளியிடுகிறது அந்நிறுவனம்.
இவை எல்லாமே தமிழில்தான்.
முதன்முறையாக தெலுங்கிலும் கால்பதிக்கவிருக்கிறது லைகா.
தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன்கல்யாணை வைத்து பெரும்பொருட்செலவில் ஒரு படத்தைத் தயாரிக்கவிருக்கிறது லைகா.
சில வாரங்களாக இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நடந்ததாம்.
அதன்பின் அண்மையில் ஆந்திரா சென்ற லைகா நிறுவனப் பொறுப்பாளர் கருணாமூர்த்தி, பவன்கல்யாணைச் சந்தித்து ஒப்பந்தத்தை இறுதி செய்திருக்கிறார்.
விரைவில் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.











