சினிமா செய்திகள்

இந்தியன் 2 – கமல் கொடுத்த அதிர்ச்சி மீளாத துயரில் படக்குழு

கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்த இப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது.

மீண்டும் கமல் ஷங்கர் கூட்டணியில்’இந்தியன் 2′ படம் உருவாகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18, 2019 அன்று சென்னையில் தொடங்கியது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடைபெற்றது.

அப்போது எடுத்த காட்சிகளைப் போட்டுப் பார்த்த போது, கமல் மிகவும் முதிர்ச்சியாகத் தெரிந்தாராம்.

அதனால் ஒப்பனையை மேலும் மேம்படுத்திக்கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்றும் அதற்காக மீண்டும் அமெரிக்கா சென்று வரவேண்டும் என்றும் கமல் கூறிவிட்டாராம்.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கலாம்.

கமல் சொன்னது சரிதானே இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது? என்றால், அவர் இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருக்கிறார். இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் தேர்தல் வரை அவர் இந்தியன் 2 பட வேலைகளுக்கு வர இயலாது.மீண்டும் எப்போது வருவார் என்றும் தெரியாது.

இதனால் மற்ற அனைவரது வேலைகளும் பாதிக்கப்படுகிறது என்பதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் இருக்கிறது என்கிறார்கள்.

Related Posts