பேட்ட வெற்றி கோவாவில் கரைபுரண்ட உற்சாகம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி சிம்ரன் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த பேட்ட படம், பொங்கல் நாளையொட்டி சனவரி 10 அன்று வெளியானது.
அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு பெரிய அளவில் வசூலும் செய்தது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இளமையான ரஜினியைப் பார்க்க முடிந்தது என்று அவருடைய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அந்தப்பட வெற்றி காரணமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை அழைத்துப் பாராட்டிய ரஜினி, இன்னொரு கதை தயார் செய்யுங்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.
இதனால் மிகுந்த உற்சாகமடைந்த கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்தில் பணியாற்றிய முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நண்பர்களோடு கோவா சென்றாராம்.
அங்கு இருந்த சில நாட்களும்
உற்சாகம் கரைபுரண்டு ஓடியதாம்.
கார்த்திக் சுப்புராஜ் ஏற்கெனவே உற்சாகமானவர் அதோடு பேட்ட வெற்றி ரஜினி பாராட்டு ஆகியனவும் சேர்ந்து கொண்டதால் உற்சாகத்தின் அளவு எக்கச்சக்கமாக கூடிவிட்டதென்கிறார்கள்.











