சூர்யாவின் என் ஜி கே பட டீசர் பற்றிய அறிவிப்பு
இயக்குநர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முதலில் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “சூர்யாவுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. அவருடைய நடிப்புத் திறமை மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டு மிகவும் வியப்படைந்தேன். என்.ஜி.கே. படக்குழுவினர் சார்பாக அவருக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தற்போது படத்தின் டீசர் பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அது எங்கே எப்போது வெளியாகும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்….
வருகின்ற 14ஆம் தேதி சென்னையில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கில் #NGK படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது இதில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் சார்ந்த அனைத்து மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுமார் 1000 நண்பர்கள் வரை இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த #NGK டீசர் வெளியீட்டு விழாவில் நீங்கள் எங்களுடன் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம் : கோயம்பேடு ரோகிணி திரையரங்கம்
நேரம் : 5.30pm To 6.30pm
தேதி : Feb 14Th
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











