சர்கார் போன்றே விமர்சனத்தை சந்திக்கும் பேட்ட
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தில் இடம்பெறும் மரண மாஸ் என்கிற பாடல் டிசம்பர் 3 ஆம் தேதி மாலை வெளியானது.
அனிருத் இசையில் உருவான அந்தப்பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.
அந்தப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் பாடல்வரிகள் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.
பாட்டு மாஸ், வரிகள் மரணம் என்றெல்லாம் விமர்சிக்கப்படுகிறது.
நல்ல மெட்டு தாளம் ஆகியன இருந்தும் அவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் வரிகள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
அந்தப்பாடல் வரிகள்….
தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க… உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க…
தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க… உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க…
திமிராம வாங்க பல்பாய்டுவீங்க… மொரப்போட நிப்பான்டா முட்டாம போங்க…
கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்…
த்தா வெடிய ஒன்னு போடு தில்லால
ஸ்லீவ சுருட்டி வர்ரான் காலர தான் பெரட்டி வர்ரான்
முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார
மரணம் மாஸு மரணம்… டஃப்பு தரனும்…
அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்…
மரணம் மாஸு மரணம்… டஃப்பு தரனும்…
ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்…
தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க… உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க…
தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க… உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க…
எவன்டா மேல… எவன்டா கீழ… எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு…
முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு…
தலையில் ஏத்தி வெச்சு கொண்டாடும் ஊரு…
நியாயம் இருந்து எதுத்து வரியா…
உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்…
கால இழுத்து உயர நெனைச்சா…
கெட்டப்பய சார் இடியா இடிக்கும்…
கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்…
த்தா வெடிய ஒன்னு போடு தில்லால
ஸ்லீவ சுருட்டி வர்ரான் காலர தான் பெரட்டி வர்ரான்
முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார
மரணம் மாஸு மரணம்… டஃப்பு தரனும்…
அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்…
மரணம் மாஸு மரணம்… டஃப்பு தரனும்…
ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்…
தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க… உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க…
தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க… உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க…
இட்டலபத்திரி…. சொல்லுபுத்திரி…சல்பிலோ…
இட்டலபத்திரி…. சொல்லுபுத்திரி…சல்பிலோ…
மரணம் மாஸு மரணம்… டஃப்பு தரனும்…
அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்…
மரணம் மாஸு மரணம்… டஃப்பு தரனும்…
ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்…
இந்த வரிகளில், ரஜினி பற்றிய புகழ்ச்சி மட்டுமே இருக்கிறது,அதையும் சுவையாகச் சொல்லவில்லை, ஏற்கெனவே இடம்பெற்ற அவர் பற்றிய புகழ்ச்சிகளை விடக் குறைவாகவே இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.
விஜய்யின் சர்கார் படத்தின் முதல்பாடல் வெளியான போதும் பாடலாசிரியர் விவேக், இதுபோன்ற விமர்சனங்களைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.