கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தில் இடம்பெறும் மரண மாஸ் என்கிற பாடல் டிசம்பர் 3 ஆம் தேதி மாலை வெளியானது. அனிருத் இசையில் உருவான அந்தப்பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். அந்தப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் பாடல்வரிகள் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. பாட்டு
நவம்பர் 29 ஆம் தேதி வெளியான ‘2.ஓ’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.













